இசைஞானியின் பிறந்த நாளில் இயக்குநரின் பிரம்மாண்ட பரிசு!

இன்று காலையில் இசைஞானி இளையராஜா தனது 82வது பிறந்தநாளை கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய ஸ்டுடியோவில் கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர். தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இசைஞானியின் 1417வது படமான “நினைவெல்லாம் நீயடா” படத்தை இயக்கிய ஆதிராஜன், இளையராஜாவின் அழகிய ஓவியத்தை பரிசளித்து மகிழ்ந்தார். அவருடன் கோல்டன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிர்வாக இயக்குனர் பி.பாக்யராஜ், பிரசிடென்சி கல்லூரி விரிவுரையாளர் பி. அம்புலிராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.