‘இந்தியன் 2’ பற்றி எதிர்மறை விமர்சனங்கள் ஏன் ?

லைகா தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ளது “இந்தியன் 2” திரைப்படம்.

கலைஞானி கமல்ஹாசனின் நடிப்பாற்றல் புதுமைத் தேடல் கொண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கம், பிரம்மாண்டங்களுக்குப் பெயர் பெற்ற லைக்கா புரொடக்ஷன்ஸ் என மூன்றும் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருந்ததால் இப் படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த மூவர் கூட்டணி அப்படி ஒன்றும் ரசிகர்களை ஏமாற்றி விட மாட்டார்கள் .ஆனால் படத்தின் நீளம் பற்றி விமர்சனங்களில் பேசப்பட்டது.
அதைக் கருத்தில் கொண்டு 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்ட புதிய பதிப்பு, இப்போது அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
எனவே நீளத்தைக் குறைத்து இப்போது வெளியிட்டுள்ளார்கள்.எனவே படத்தில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.


இந்தியன் 2 பற்றி அரசியல் உன் நோக்கத்தோடும் காழ்ப்புகளோடும் பொறாமையோடும் சிலரால் எதிர்மறை விமர்சனங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் முறியடித்து விட்டு இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.படம் பார்த்துவிட்டு வருபவர்கள் வந்துட்டு லஞ்சத்துக்கு எதிரான கருத்தைச் சொல்லும் படம் ஒரு தவறான படமா?ஏன் இப்படி இது மாதிரி எதிர்மறை விமர்சனங்கள் வந்தன என்று கேட்கிறார்கள்.