தேவகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம். மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசாமி தயாரித்திருக்கிறார்.
ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு -ஏஎம்எம் கார்த்திகேயன், இசை-பரிமளவாசன், படத்தொகுப்பு-ராஜேஷ்,கண்ணன், அஜிக்குமார்.
மேக்னா ஒரு செல்போன் கடையில் வேலை பார்க்கிறார். அவர் கிராமத்தில் இருந்து வந்தவர்.மேக்னாவை மூன்று இளைஞர்கள் தொடர்ந்து துரத்திக் காதலிக்கிறார்கள். மேக்னாஅந்த மூவரையும் காதலிப்பதாகப் பொய் சொல்கிறார். அவர்களை ஏமாற்றி ஒரு இடத்திற்கு வரவழைக்கிறார். அதே சமயம் முன்னாள் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன் பாண்டி கமல் தலைமையில் சில இளைஞர் குழு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்வோரைத் தண்டிக்கிறது.இறுதியில் மேக்னா மூவரையும் வரவழைத்தது ஏன்?அது ஏமாற்று வேலையா அல்லது சதியா? அது அவர்களுக்குத் தெரிந்ததா? அவர்கள் என்ன ஆனார்கள்?ஆடுகளம் நரேன் செயல்களுக்கான பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆபத்திற்கு பாவம் இல்லை என்பது போல் இந்த வன்முறையில் நியாயம் உள்ளது. பாலியல் கொடூரங்களுக்கு எதிராக சட்டத்தை கையில் எடுக்கும் இந்தக் குற்றத்தில் தப்பில்லை என்று சொல்ல வந்திருக்கும் படம்.
படத்தில் பிரதான பாத்திரங்கள் ஏற்றுள்ள ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி ஆகியோர் கொடுத்த வேலையைக் குறையின்றிச் செய்துள்ளனர்.
பாலியல் வன்முறை செய்பவர்களை என்ன செய்யலாம் என்று மக்கள் பேசுகிறார்களோ அந்த மக்களின் மனசாட்சியாக காட்சிகள் வைத்துள்ளார்கள். ஆனால், காட்சிகளின் தொடர்பு இன்மையாலும் அழுத்தமின்மையாலும் சமகால சினிமாவைப் புரிந்து கொள்ளாமல் பழைய போக்கில் சொல்லியிருப்பதாலும் பட முயற்சி சுமாராகி விடுகிறது.காட்சிகளில் தொனிக்கும் நாடகத்தன்மை நம்பகத்தன்மையைக் குறைத்து விடுகிறது.இதுவே பழைய படம் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுத்து விடுகிறது.
மொத்தத்தில் படம் கருத்து சொல்ல வந்த நோக்கத்தில் பழுதில்லாமல் இருக்கலாம். ஆனால் ஆக்கத்தில் பல குறைகளோடு உள்ளது.