இன்று காதலர் தினத்தன்று ஆஹா தமிழ் அதன் புதிய வெப் சீரிஸ் “மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்” மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டுவருகிறது.
மதுரை பையனுக்கும் சென்னைப் பெண்ணுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளை ஆராயும் ஒரு மனதைக் கவரும் வெப் சீரிஸ் ஆக தயாரிக்கப்பட்டுள்ளது. மோதலில் தொடங்கும் இவர்களது தவிர்க்க இயலாத நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. காதலில் இணைய முடியாதபடி இரண்டு கதாபாத்திரங்கள் குறுக்கே வர, காதல் கை கூடியதா இல்லையா என்ற கதைக்களத்தை காமெடி கலந்த ஒரு நகைச்சுவை பேக்கேஜாக திரைக்கதை அமைந்துள்ளது.
பிரபல இணைய மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஏஞ்செலின் இந்த தொடரின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு இணையாக தொடரின் நாயகனாக கண்ணா ரவி நடிக்கின்றார் .இவர்களுடன் ரேணுகா , குரேஷி, ஷ்யாமா ஷர்மி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.
விக்னேஷ் பழனிவேல் இயக்கும் இந்த வெப் சீரிஸ் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காதலர் தினமான இன்று இரவு 7 மணி முதல் ஆரம்பமாகிறது . அதனை தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசொட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காதலை கொண்டாடும் இந்த தொடரை காதலர் தினத்தன்று ஆஹா ஓடிடி தளத்தில் காணத்தவறாதீர்கள் .