இந்த ஆண்டு இசைக்குயில், பாரதரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழாவாகும். அதை முன்னிட்டு பல்வேறு விழாக்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
‘தமிழ் ஐகான்ஸ்’ மற்றும் ‘ எம் எஸ் ஸுக்கு சமர்ப்பணம் ‘ என்கிற ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் கண்காட்சி நேற்று சென்னை அம்ப்ரோசியா ஆர்ட் கேலரியில் தொடங்கி வைக்கப் பட்டது.
விழாவில் எல்.வி.பிரசாத் பிலிம் அண்ட் டிவி அகாடமியின் துறைத் தலைவர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி , பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் கண்காட்சியைத் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன், கவிதா பப்ளிகேஷன் பதிப்பக அதிபர் சேது.சொக்கலிங்கம், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ‘பாப் டா ‘ திரைப்படக் கல்லூரி நிறுவனர் ஜி.தனஞ்ஜெயன், இயக்குநர் எஸ் .அருண்மொழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கண்காட்சி ஏற்பாடுகளை ,திரைப்பட இயக்குநர் எம்.வெங்கடேசன் டி.எஃடி .செய்திருந்தார். சாய் மீடியா நிறுவனமும் அவர் குழுவும் சேர்ந்து செய்தது . விழா ஒருங்கிணைப்பை வடிவமைப்பை உதயசங்கர் செய்திருந்தார்.
இவ்விழாவில் பேசிய பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன்பேசும் போது,
” ஏதோ புகைப்படக் கண்காட்சி என்று நினைத்து இதற்கான முழு விவரம் தெரியாமல்தான் இங்கு வந்தேன். இங்கு வந்து பார்த்தால் தமிழ் சினிமாவின் சிறந்த வின்டேஜ் புகைப்படங்கள் இருந்தது மற்றும் ஓவியக் கண்காட்சியாக இருக்கிறது . அருமையான எம் எஸ் ஓவியங்கள் இருக்கின்றன .
இது ஒரு நல்ல முயற்சி .இங்கு ‘பிரைட் ஆப் சினிமா’ என்கிற நூலை எழுதியுள்ள தனஞ்ஜெயன் வந்துள்ளார். அவரது நூலே ஒரு என்சைக்ளோபீடியா போல இருக்கும் –
அவர் எம் எஸ் பற்றியும் தகவல்களை எழுதியுள்ளார். அவர் இங்கே வந்துள்ளது சிறப்பு ”என்றார்.
பாப் டா திரைப்படக் கல்லூரி நிறுவனர் ஜி.தனஞ்ஜெயன் பேசும் போது,
“எம் எஸ் அம்மா நான்கே படங்களில்தான் நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்தார்கள். பாடகியாக மட்டுமல்ல நடிகையாகவும் புகழ் பெற்றவர்கள். அவரது படங்கள் பார்த்து பாடல்கள் கேட்டு வியந்தவன். நான். காலையில் தினம் கேட்பது அவரது குரலில் ஒலிக்கும் சுப்ரபாதம் தான். அவரது ‘ குறையொன்றுமில்லை ‘ பாடலை மறக்க முடியுமா.? அவரை பல ஓவியர்கள் ஓவியங்களாக வரைந்து வைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி யும் மற்றும் எம் எஸ் அம்மாவின் புகைப்படங்களும் அவர்களின் திரைப்படங்ககளின் படங்கள் (meera,sakuntalai) முயற்சி அவருக்கான சிறந்த அஞ்சலி என்று கூறலாம்.”என்றார்.
இயக்குநர் எஸ். அருண்மொழி பேசும் போது,
“நான் எம் எஸ் அம்மா அவர்களின் நான்கு கச்சேரிகளை நேரில் பார்த்து இருக்கிறேன் அவர் பாடினால் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டுவார்கள்.அவ்வளவு மரியாதை வைத்திருந்தார்கள்.
இசை மூலம் சம்பாதி்த்த பெரும் பணத்தை நலிந்த பலருக்கும் அமைப்புகளுக்கும் வாரி வழங்கியவர்.
சினிமாவில் பெரிய நட்சத்திர அந்தஸ்து நிலை வந்த போதும் கூட அதைப்பெரிதாக எண்ணாமல் சினிமாவை விட்டு விலகி முழுமையாக இசைத்துறைக்கே தன்னை அர்ப்பணித்தவர். ”என்றார்.
கவிதா பப்ளிகேஷன் பதிப்பக அதிபர் சேது.சொக்கலிங்கம்பேசும் போது,
“ஆங்கிலத்தில் அவர் பற்றி நிறைய நூல்கள் வந்துள்ளன. ஆனால் தமிழில் பெரிதாக வரவில்லை. எங்கள் கவிதா பப்ளிகேஷன் சார்பில் வரும் 24ஆம் தேதிமாலை 5 மணிக்கு மகாலிங்கபுரம் எம்.எல்,எம்.கல்யாண மண்டபத்தில் பெரிய நூல் வெளியிட இருக்கிறோம். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இதை வெளியிடுகிறோம். .
இங்கே ஆர்ட் கேலரியைப் பார்த்தேன்.இது ஒரு நல்ல முயற்சி .வெங்க டேசனின் வரலாறு சார்ந்த ஆராயச்சி இப்போது வெற்றிகரமான முயற்சி .நன்கு தெரிகிறது இம்முயற்சி பல சர்வதேச நாடுகளையும் தமிழ் சினிமாவின் இலக்கை இப்பணி சென்று சேர வேண்டும் .வாழ்த்துக்கள்.”என்றார்.
எல்.வி.பிரசாத் பிலிம் அண்ட் டிவி அகாடமியின் துறைத் தலைவர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி பேசும் போது,
” இது இரு விஷயத்தில் பெருமைக்குரிய சிறப்புக்குரிய நிகழ்வு. இந்த ஆண்டு எம்.எஸ். நூற்றாண்டு மட்டுமல்ல தமிழ் சினிமாவின் நூற்றாண்டும் கூட.
இவ்வளவு பெருமை இருந்தும் நமக்கு கடந்த கால வரலாறு பற்றித் தெரியவில்லை. இன்று யாருக்கும் பழைய சினிமா வரலாற்றை அறிவதில் ஆர்வமில்லை .வரலாற்றை அறிய பொறுமையில்லை.அது பற்றிக் கவலையும் இல்லை
ஆனால் வெளிநாடு சென்றால் அங்கே வேறு விதமாக இருக்கிறது. நான் மலேசியா சென்ற போது அங்குள்ள தமிழ்ச் சமூகம் பாடல்களை வானொலி.யில் கேட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்தேன். இங்குள்ள எம்.எஸ் ஓவியங்களில் அவரது பல்வேறுபட்ட வயதுகளில் ஓவியங்களைப் பார்த்தேன். பல்வேறுபட்ட மன நிலைகளில் உள்ள ஓவியங்களைப் பார்த்தேன்.பல்வேறுபட்ட தோற்றங்களில் உள்ள ஓவியங்களைப் பார்த்தேன்.
இது இழந்ததை மீட்டெடுக்கும் முயற்சி.. நாம் பலவற்றை பழையதை இழந்து விட்டோம். பல வரலாறுகளை ஆவணங்களைத் தொலைத்துவிட்டோம். . பல ப டங்களுக்கு நெகடிவ்வே இல்லை. ஆனால் யாரும் செய்யாத முயற்சியை, திரையுலகம்செய்யாத முயற்சியை , ஏன் அரசாங்கமே செய்யாத முயற்சியை பிலிம் நியூஸ் ஆனந்தன் தனியாளாக இருந்து செய்து வைத்து இருந்தார். அப்போது செய்ததை இப்போது சாய் மீடியா வெங்கடேசன் மாதிரி ஆட்கள் தானாக முன் வந்து செய்துள்ளார்கள். புகைப்பட கண்காட்சி சர்வதேச திரைப்பட விழாவிற்கு போக வாழ்த்துக்கள் ‘என்றார்
நிறைவாக,திரைப்பட இயக்குநர் எம்.வெங்கடேசன் பேசும் போது,
” எந்த நல்ல முயற்சி தொடங்கும் முன்பும் முரண்பாடும் பிரச்சினையும் வரும் நானும் அதை எதிர்கொண்டேன். என்றாலும் விடவில்லை இம்முயற்சி பல்வேறு வடிவங்களிலும் தொடரும் ”என்று கூறி அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவில் இசைக்கலைஞர்கள் குபேரன்,மார்ஷல் ராபின்சன்,ஷ்ரவன் இணைந்து வழங்கிய எம் .எஸ் பாடல்களின் கச்சேரி நடைபெற்றது.