டிஜிட்டல் மயமான உலகத்தின் இந்திய பெருமைகளான திரு.சுந்தர் பிச்சை கூகுளின் தலைமையேற்று நிற்கிறார். அதோடு இன்று தொடர்பு கொள்ளுதலின் உச்சமான கண்டுபிடிப்பாக திகழ்கிறது இமெயில். அதைக் கண்டுபிடித்து இந்தியப் பெருமையாக தமிழ்ப்பெருமகனாக இருப்பவர் டாக்டர்.திரு. V.A. சிவா அய்யாதுரை பி.எச்.டி. அவர்கள்,
இமெயிலின் தந்தை டாக்டர்.V.A.சிவா அய்யாதுரை கலந்து கொண்ட ”சுவாசம் விருதுகள் 2015” விழா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமையேற்று சிறப்புரை வழங்கினார் டாக்டர் சிவா அய்யாதுரை.
சுவாசம் சாப்ட் (svasam soft) & சுவாசம் குளோபல் கன்சல்டன்ஸி (sgbc) பிஸினஸ் குரூப் நிறுவனத்தின் சேர்மன் P.கிருஷ்ணன், டாக்டர். K.கார்த்திகேயன் (CEO) மற்றும் K. கணேஷ் (CFO) ஆகியோர் இணைந்து வருடா வருடம் தொழில் நுட்பத் துறையில் வெவ்வேறு பிரிவுகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு சுவாசம் விருதுகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். அதன் முதற்கட்ட விருதுகள் தொழிற்துறை சார்ந்த நிபுணர்கள் 75 பேர்களுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக் கலகத்தில் உள்ள அரங்கத்தில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் இன்று வழங்கப்பட்டது.
சுவாசம் குரூப் ஆஃப் கம்பெனி டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கும் முனைப்பில் இறங்கியுள்ளது.
சுவாசம் குரூப்பின் CEO டாக்டர். K.கார்த்திகேயன் கூறும்போது
”இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக தமிழகத்தின் பங்கு அதில் பெரும் சதவீதத்தை தனதாக்கி வைத்திருக்கிறது. உலகமே டிஜிட்டல் மயமாகி நிற்கிறது. இன்று எல்லாவற்றையும் ஆன்லைன் மூலமாகவே வீட்டிற்குள் கொண்டு வந்துவிட முடிகிறது. அத்தகைய டிஜிட்டல் மயத்தில் எங்கள் சுவாசம் குரூப்பும் ஒரு சிறு புள்ளியாக தனது செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
நாங்கள் ஏற்படுத்தியுள்ள bizbilla.com (B2B) இணையதளம் 80 ஆயிரம் கோடி பக்கங்களை கொண்டது. இதன் மூலம் ஒரு தொழிலதிபர் இன்னொரு தொழிலதிபரை (Business man to Business man) இணைத்துக் கொள்ள முடியும். அதன் மூலம் தொழில் வளர்ச்சியை சுவாசம் குரூப் ஊக்கப்படுத்துகிறது. உலகம் முழுக்க உள்ள தொழில் அதிபர்களை நாடுகள் தாண்டி இந்த வலைதளம் இணைக்கிறது.
அடுத்து ecbilla.com (Business man to Customer) என்ற இணையதளம் தொழில் செய்பவர்களையும் நுகர்வோரையும் இணைக்கும் தளமாக செயல்படுகிறது.
edubilla.com என்ற இணையதளம் கல்வியை, கல்வி வளர்ச்சியை ஊக்கப் படுத்துகிறது. இது போன்ற 60 (Portal) இணையதளங்கள் மூலம் டிஜிட்டல் புரட்சியை மௌனமாக செய்து வருகிறோம்.
நாம் மட்டுமே செய்தால் போதாது இந்த டிஜிட்டல் புரட்சியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கி கவுரவிப்பதே சுவாசம்-2015 விருதுகள் வழங்கும் விழாவின் நோக்கம்.
நாம் தமிழனாக, இந்தியனாக பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய உயரம் இமெயிலின் தந்தை டாக்டர். V.A.சிவா அய்யாதுரை இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்தது எங்களுக்கு பெருமை.
இவ்விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறும்” என்றார் டாக்டர் KK. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் காமெடி டைம் அர்ச்சனா.