
படத்தில் இடம்பெறும் பாடலின் படப்பிடிப்பிற்காக ஓமன் நாட்டிற்குப் படக்குழுவினர் சென்றனர். தமது நாட்டில் படப்பிடிப்பு நடத்துவதை அறிந்த ஓமன் நாட்டின் தகவல் துறை அமைச்சர் திரு மர்வான் யூசுப் இயக்குநர் கௌரவ் நாராயணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இப்படத்தின் பாடல் காட்சிகளைப் பார்த்த ஓமன் நாட்டின் அமைச்சர் திரு மர்வான் யூசுப் இயக்குநர் கௌரவ் நாராயணன் மற்றும் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.