தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரடொக்ஷன்ஸ்” ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு வெற்றியினைத் தொடர்ந்து “ரைட்டர்” படம் தயாரிப்பில் இருக்கும் நிலையில், தற்போது யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படத்தை, யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது நீலம் புரடொக்ஷன்ஸ்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். ‘பொம்மைநாயகி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியிருக்கிறது.
யோகிபாபுவோடு இணைந்து
சுபத்ரா,
ஜி,எம் குமார்,
ஹரி,
விஜய் டிவி ஜெயச்சந்திரன். உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்திருக்கிறார்.