தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்’- Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா ராஜ்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
மதன் தக்ஷிணாமூர்த்தி இந்தப் படத்தை எழுதி இயக்கியதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெளடிபேபி புகழ் S.J. ஆழியா, அருவி படப்புகழ் திருநாவுக்கரசு, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜூக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:
T. வினோத் ராஜா MFI உடன் இணைந்து ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜிவி பிரகாஷூடன் ராபர்ட் சற்குணம் இணைந்து பின்னணி இசை அமைத்துள்ளார். ரமேஷ் கிருஷ்ணன் MK படத்தின் பாடல்களை கம்போஸ் செய்துள்ளார்.
படத்தொகுப்பு: சரத்குமார்,
பாடல் வரிகள்: தனிக்கொடி & ராஷ்மி,
கலை இயக்கம்: ஆனந்தன் எட்வர்ட் கென்னடி,
ஒலி வடிவமைப்பாளர்: JM ஃப்ரான்சிஸ்,
DI கலரிஸ்ட்: கிருபா ப்ரின்ஸ்,
வடிவமைப்பு: பாரதி,
VFX: பாலு,



ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் பிரக்னா அருண் பிரகாஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார், அவருடன் சுருளி ராஜா டிஎம் மற்றும் வசந்தமாரிமுத்து இணைந்து தயாரிக்கின்றனர்.
V ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் அனைத்து வகையான வெளியீட்டு உரிமைகள் உட்பட உலகளாவிய வெளியீட்டைப் பெற்றுள்ளது.