இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ‘சாரி’ திரைப்படத்தின் டிரெய்லர் முத்திரை பதிக்கிறது!

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் வெளியாக இருக்கும் ‘சாரி’ திரைப்படம் அதன் அறிவிப்பு வந்ததில் இருந்தே இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் டிரெய்லர் அதன் எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ வகை ஜானர் எடுப்பதில் வல்லவர். அந்த ஜானரில் அமைந்திருக்கும் இந்தக் கதையில் பல திருப்பங்கள் அமைந்திருப்பது ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த விருந்தாக அமையும் என்பதையே டிரெய்லர் காட்டுகிறது. இதை இயக்குநர் கிரி கிருஷ்ணா சரியாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

‘சாரி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிப்ரவரி 28, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தில் ஆராத்யா தேவி மற்றும் சத்யா யாது ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மற்ற நடிகர்கள் சாஹில் சம்பியல், அப்பாஜி அம்பரீஷ், கல்பலதா. கிரி கிருஷ்ணா கமல் இயக்கி இருக்க, ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி சார்பில் ரவி ஷங்கர் வர்மா ‘சாரி’ படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தினை வழங்கும் ராம் கோபால் வர்மா திரைக்கதையும் எழுதியிருக்கிறார்.