உலக சுகாதார மையத்தின் ( WHO ) தகவலின்படி எந்தவொரு நாட்டிலும் ஆரோக்கியமானசமூகத்தில் , மக்கட்தொகையில் குறைந்த பட்சமாக ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவராவது இருக்கவேண்டும் .அதாவது மருத்துவரின் எண்ணிக்கையானது மொத்த மக்கட்தொகையில் 1:1000 என்று இருக்கவேண்டும் .ஆனால் நமது இந்திய நாட்டில் மக்கள் தொகையானது வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளகாரணத்தினால் மருத்துவரின் விகிதமானது 1:1689 ஆக உள்ளது.
இந்திய மருத்துவக் கழக ( MCI )தகவலின் படி நமது நாட்டில் இதுவரை பதிவு பெற்ற சுமார் 9.30லட்சம் மருத்துவர்களில் , ஏறக்குறைய 7.5 லட்சம் மருத்துவர்கள் சேவை புரிந்து வருகிறார்கள். ஆக உலகசுகாதார மையத்தின் குறைந்த பட்ச விகிதாச்சரத்தை அடைய பற்றாக்குறை நிலவுவதால் இன்றையதேதியில் சுமார் 6 லட்சம் மருத்துவர்கள் இன்னமும் கூடுதலாக தேவைப் படுகிறார்கள்.
MCI தரவுகளின்படி வருடாவருடம் 55,000 மருத்துவர்கள் உருவாகி வருகிறார்கள். இன்னும் விரிவாகபார்க்கப் போனால் அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 61,220 இடங்களே உள்ளன. கடந்தவருடத்தைப் பொருத்தவரை இந்தியா முழுவதும் 50 லட்சம் பன்னிரெண்டாம் வகுப்பு அறிவியல் பாடமாணவர்களில் சுமார் 12 லட்சம் மாணவர்கள் மருத்துவக் கனவோடு நீட் ( NEET ) தேர்வு எழுதி அதில் 6.1லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றனர் . ஆனாலும் எம்பிபிஎஸ் MBBS படிக்க சுமார் 61,000 இடங்களேஉள்ளதால், தகுதி பெற்ற மாணவ மாணவியர்களில் பத்தில் ஒரு பங்கு மாணவர்களுக்கே தங்களின்மருத்துவக்கனவை கைப்பற்ற இயலும் சூழல் உள்ளது. இதுவே நமது மாநிலமான தமிழ் நாட்டைப்பொருத்தவரை அங்கீகாரம் பெற்ற சுமார் 44 மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 6,100 இடங்களே உள்ளன.இதில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் அடங்கும்.
நீட் ( NEET ) தேர்வு வந்த பின்னே தனியார் கல்லூரிகளின் கட்டாய நன்கொடை போன்ற சிரமங்கள் குறைந்த போதிலும் , கல்விக் கட்டணம் மிகவும் அதிகமாக , சாமான்ய மக்களுக்கு இன்னமும் எட்டமுடியாத உயரத்திலேயே உள்ளது. இவ்வளவு அரிதான வேளையிலும் மாணவ மாணவியர் கஷ்டப்பட்டுதங்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றி, மருத்துவர்களாக வெற்றியுடன் வரும்போதிலும் , மேற்படிப்புபயிலவும் போதுமான இடங்கள் இல்லை என்பது வருத்தமான விஷயமாகும்.
இதேவேளையில் , நமது மாணவ மாணவியர் தங்களது பள்ளிப் படிப்பை ஆங்கிலத்தை ஒருமொழியாகக் கொண்டோ அல்லது ஆங்கில வழியிலோ படித்து வருவதினால் வெளிநாடுகளில் மருத்துவம்பயில விருப்பமுடன் தயாராகி வருகின்றனர். உலகத்தரத்தத்தில் மருத்துவம் பயின்றால் எதிர் காலத்தைப்பற்றிய கவலையும் இல்லை என்பதும் அதுவும் நம் நாட்டில் நிலவும் தட்ப வெப்ப நிலை கொண்ட கிழக்குஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்கத் தரத்தில் மருத்துவப் படிப்பு கையடக்ககட்டணத்தில் கிடைக்கும் வாய்ப்பும் பெற்றோர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது.
பிரபல கல்வியாளர்களின் ஒருவரான பிகேஎஸ் ஆதித்தன் அவர்கள் நீட் தேர்வு பற்றிய விழிப்புணர்வுமாணவர்களிடையே உருவாக்கி வருகிறார். அளப்பரிய வாய்ப்புகள் உள்ள படிப்புகள் பற்றியும் அதன்விவரங்கள் பற்றியும் பள்ளிகளின் மூலமாகவும் பெற்றோர்களுடன் உரையாடல் மற்றும் சமூக ஊடகங்கள்மூலமாகவும் மாணவர்களின் போட்டித்திறன் வளர்ப்பை ஊக்குவித்து வருகிறார். மேலும் உலகளாவியபோட்டித்திறன் வளர்த்தல் மாணவ மாணவியரின் எதிர்காலத்தை வளமாக்கும் என்பதே இவரது உறுதியானகருத்து. இவர் கிழக்கு ஆசிய நாடுகளின் செய்த கள ஆய்வின் படி நேரடியாக உறுதி செய்து கொண்டபல்வேறு பயனுள்ள தகவல்களை இன்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியதாவது
இணையதளப் பயன்பாட்டின் விழிப்புணர்வு வந்த பின்னே மாணவர்களும் சரி பெற்றோர்களும் சரிவெளியுலகத்தைப் பற்றி நன்கு தெரிந்துக் கொள்வதால் தற்சமயம் பிலிப்பைன்ஸ் நாடுதான் அனைருவருக்குமே முதல் விருப்பமாக உள்ளது. இன்றைய தேதியில் அமெரிக்காவில் உள்ளமருத்துவர்களில் அதிகமானவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்றவர்கள் என்பதால், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிலும் 100 வருட பழமையான விசயாஸ் பல்கலைக் கழகத்தின் (University of Visayas)குலியாஸ் மருத்துவக் கல்லூரியில் (UV Gullas College of Medicine) சமீப காலமாக தென்னகத்தில்இருந்து அதிக மாணவர்கள் படித்து வருகின்றனர்.
எம்சிஐ MCI அங்கீகாரம் பெற்ற யூவி குலியாஸ் UV Gullas கல்லூரி நிர்வாகமானது ஒவ்வொருவருடமும் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும் எனும் ஒரேநோக்கில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உயர் தர வசதிகளையும் உறுதி செய்கிறது. மன்னர்வம்சாவழியை சேர்ந்த நிர்வாகம் என்பதினால் உயர்நோக்கத்தோடு குறைந்தக் கட்டணத்தில் சர்வதேசத்தரத்தில் மருத்துவக் கல்வியை வழங்கி வருகிறது. இக்கல்லூரி அமைந்துள்ள செபு நகரமானது உலகளவில்நல்ல இணக்கமான சூழல் நிலவும் அமைதியான மற்றும் குற்ற விகிதம் மிகவும் குறைவானமாநகரங்களில் ஒன்று. சென்னைக்கு கிழக்கே ஏறக்குறைய ஒரே நேர் கோட்டில் உள்ளதால் தட்ப வெப்பநிலை சென்னையை ஒத்து உள்ளது. ஏற்கனவே பழக்கப் பட்ட சீதோஷண நிலை மட்டுமில்லாமல் நமதுதமிழ் நாட்டு உணவும் அருமையான சுவையுடன் கிடைக்கிறது எனவேநமது தமிழ் மாணவ மாணவியர்கள்எவ்வித உபாதையும் இல்லாமல் இனிதான மனநிலையில் தங்களது கனவுப் படிப்பை எவ்விததொந்தரவுமின்றி நன்றாக பயின்று வருகிறார்கள்.
யூ . வி. குலியாஸ் கல்லூரியானது தொடர் திறன் வளர் பயிற்சிகள் வழங்கும் தன்னாட்சி அந்தஸ்துபெற்றுள்ள கல்லூரி என்பதினால் உலகத்தரத்தில் பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நோக்கில் நமதுமாணவர்களால் ஆழமாகவும் அருமையாகவும் மேலும் ஆங்கில வழியிலேயே எளிதாகவும் பயின்று வரமுடிகிறது. வேறு எந்தவொரு மொழியும் பயில வேண்டிய கட்டாயம் இல்லாததால் முழு கவனமும்மருத்துவம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி என தீவிரமாய் அடுத்ததடுத்த தேர்வுகளுக்கு தயாராகுகின்றனர்.குறிப்பாக உடற்கூறு ஆய்வியலில் அதிநவீன கேடவர் ( cadevar ) வசதியும் அதை பயிற்றுவிக்கக் கூடியநுட்பத்துடன் பணியாற்றும் அறிஞர் குழுவும் மற்றும் அதிக அளவிலான நோயாளிகள் வருகின்றமருத்துவக் கல்லூரியோடு அமைந்துள்ள மருத்துவமனை ஆகியவை யூவி கல்லூரியின் தனித்துவமானமேம்பட்ட தரத்திற்கு எடுத்துக்காட்டு. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் விருப்பத்தின் பேரில்போட்டித்தேர்வுகளுக்கென்றே பிரத்யேகமான பல்வேறு பயிற்சிகளையும் வகுப்புகளையும் கூடுதலாகவழங்குகிறது. இதனால் அமெரிக்கா நடத்துகிற யூ.எஸ்.எம்.எல்.ஈ தேர்வு ( USMLE ) மற்றும் இந்தியாநடத்துகிற எம்.சி.ஐ ஸ்க்ரீனிங்க் தேர்வு ( MCI Screening Test / FMGE ) ஆகியவற்றிற்காக , மாணவமாணவியர்கள் முதலிலேயே தயாராகி விடுவதால் எளிதாக தேர்ச்சி பெற மட்டுமில்லாமல் தர வரிசைப்பட்டியலில் இடம் பெறவும் முடியும்.
இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த யூ வி குலியாஸ் கல்லூரி, இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்நலனுக்காக தனது நேரடி சேர்க்கை மையத்தை சென்னை வடபழனியில் சிவன் கோயில் அருகாமையில்100 அடி சாலையில் அமைத்துள்ளது. கல்லூரியின் இணைய தளங்கள் (www.uvgullas.com /www.uvgullascollegeofmedicine.com) மற்றும் அலைபேசி எண்கள் / வாட்ஸாப் எண்கள் +91 944 555 38 77 / +91 944 555 48 77 மூலமாக பயன்பெறலாம்.
உன்னதமான மருத்துவக் கல்வியை , உலகத்தரத்தில் நமது மாணவர்கள் பயிலும் காரணத்தினால்நாளையே நம்மைச் சுற்றிலும் திறன் மிகுந்த மருத்துவர்கள் இருப்பார்கள். நமது நாட்டுக்கும் நல்ல ஒருவளர்ச்சிக்கும் அடிப்படையான , நல்ல ஆரோக்கியமான மனித வளம் உருவாகும்.