விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்ற நிவேதா தற்போது மூன்றாவது வாகோ இந்தியா ஓபன் இண்டர்நேஷனல் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்தார்!
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பல வெற்றிகளை விளையாட்டு வீரர்கள் அடைந்து வருகின்றனர். அந்த வகையில், கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்ற நிவேதா தற்போது புதிய சாதனைப் படைத்துள்ளார். புதுதில்லி ஜே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மூன்றாவது வாகோ இந்தியா ஓபன் இண்டர்நேஷனல் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2024, பிப்ரவரி 7 முதல் 11 2024 வரை நடைபெற்றது. இதில் நிவேதா 2 தங்கப்பதக்கங்களை வென்றார். இதுமட்டுமல்லாது, பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் நிவேதா. இதற்குமுன்பு, துருக்கியில் நடைபெற்ற ஏழாவது துருக்கிய சர்வதேச கிக் பாக்ஸிங் உலகக் கோப்பையில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்த இரண்டு பதக்கங்களையும் வென்ற முதல் தமிழக வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இத்தாலியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் இவர் பங்கேற்றார். தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் இரட்டை தங்கப் பதக்கம் வென்றது மட்டுமல்லாது, கேலோ இந்தியா போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றார். பல்வேறு மாநில, தேசிய மற்றும் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை 30க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். நிவேதாவின் இந்த செயலால் தமிழகம் பெருமை அடைந்துள்ளது.