பிரபலமான, மக்கள் மனதில் நீங்கா இடம் பெறும் பாடல்கள் தலைப்பாக வருவது அந்த பாடலின் வெற்றி படத்தின் தலைப்புக்கும் உதவும் என்பதால் தான். அஜீத் குமாரின் நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி அடைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம் பெற்று மிக பிரபலமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடலின் முதல் வரியில் இப்போது ஒரு படம் உருவாகிறது.
டெய்சி’ என்று முதலில் தலைப்பிடப்பட்ட இந்த படத்துக்கு கதையின் தன்மைக்கு ஏற்றவாறு இருக்குமன்பதால் ‘உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி ‘ என்று தலைப்பு வைத்து இருக்கிறோம்.இந்த கதை அமானுஷ்ய சக்தியைப் பற்றிய கதையாக இருந்தாலும் ,மூலக் கருத்து ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் கதைதான். இந்தக் கதைக்கு பொருத்தமாக பல தலைப்புகள் தேடினோம், எங்கள் அனைவரின் ஒருமித்த கருத்தும்’உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி’ தலைப்பாக தான் இருந்தது.தந்தை மகள் உறவை சித்தரிக்க இதை விட சிறந்த தலைப்பு எது?
எந்த உறவிலும் உறுதி மொழி முக்கியமானது. மற்ற உறவுகளை விட தந்தை மகளுக்குள் இருக்கும் உறவும், அதன் வாயிலாக கொடுக்கப் படும் உறுதி மொழியும் காலத்தை தாண்டி நீடிக்கும் என்பர். அப்பேற்பட்ட ஒரு தந்தை , கருவில் இருக்கும் தன் சிசுவிடம் கொடுக்கும் உறுதி மொழி , அதைக் காப்பாற்ற முடியாமல் அவர் திசை மாறும் சூழ்நிலை, காப்பாற்ற படாத உறுதி மொழியின் காரணமாக உயிர் இழக்கும் அந்தக் குழந்தை பின்னர் ஆவியாகி தன்னுடைய நிலைமைக்கு பழி வாங்கும் சூழ்நிலை என்று தட தடக்கும் திரை கதை மூலம் ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி’. இந்த வகை படங்கள் பொதுவாக நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.ஆனால் இந்தப் படம் சில பல நிஜ சம்பவங்களின் கோர்வையாகும். Auraa Cinemas நிறுவனம் இந்தப் படத்தை உலகெங்கும் திரை இட உள்ளனர். ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியிடப்பட உள்ள’உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி’ எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை ‘ என்று உறுதி படக் கூறினார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.