மிகவும் வித்தியாசமான கதை என்பதாலும், மிக சிறந்த முறையில் படமாக்க பட்ட விதத்தாலும் டீசர் வெளியான நாள் முதல் எல்லோருடையப் பாராட்டையும் பெற்ற ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தின் இசையும் பரவலாக பாராட்டு பெறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் படக் குழுவினர்.
இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் இளம் இசை அமைப்பாளர் சிவ சரவணன் பல்வேறு இசை ஆல்பம் தயாரித்தவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தின் இசை இன்று வெளியானது .இதை பற்றிக் சிவ சரவணன் கூறும் போது
‘ இது என் வாழ்வில் மிக முக்கியமான நாளாகும். இந்த நாளை , எனக்கு ஏழு வயது ஆகும் போது இருந்தே எதிர் நோக்கி வருகிறேன். ‘உனக்கென வேணும் சொல்லு ‘ படத்தின் இயக்குநர் இந்தப் படத்தில் ஒவ்வொருப் பாடலும் மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும்,அதிலும் பின்னணி இசைதான் படத்துக்கு உயிர் நாடியாகும் என்றார்.பின்னணி இசைக்கு பெயர் போன இளையராஜாவை கடவுளாக பூசிப்பவன் நான் , சவாலை ஏற்றுக் கொண்டேன்.இப்பொழுது படம் பார்த்தவர்கள் பாராட்டும் போது நான் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போகிறேன்.இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் என்னிடம் மட்டுமல்ல படத்தின் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிக நடிகையரிடம் இருந்து மிக சிறந்த முறையில் திறமைகளை வெளி கொண்டு வரச் செய்து உள்ளார்.
எனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ஷானுக்கு என் மனமார்ந்த நன்றி.என் இசைக்கு வடிவம் கொடுத்த பாடலாசிரியர்கள் ஜி கே பி , ஷெரினிக் விஸ்வநாதன் அவர்களுக்கும், உயிர் கொடுத்த பின்னணி பாடகர்கள் ஹரி சரண், ஸ்வேதா மோகன், ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி. வேல்முருகன் குரலில் வரும் பாடல் அரங்கில் படம் பார்ப்போர் அனைவரையும் கவரும். இந்தப் பாடல் டீசர் மூலம் எல்லோரையும் சென்றடைந்து பிரபலம் ஆனது எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். அடுத்த மாதம் 17ஆம் தேதி ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ உலகெங்கும் வெளி வர உள்ளது.இந்த நிமிடத்தில் கடவுள் என்னிடம் வந்து ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்றால் நான் கேட்பது என் பாடல்கள் ஹிட்டாக வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்’ என்றார் சிவ சரவணன்.