ஆரி,பிரபு, ஊர்வசி, மாயா, பால சரவணன், மிஷா கோஷல் ,தென்னவன், ஸ்ரீரஞ்சனி மன்சூரலிகான், நமோ நாராயணன், எம். எஸ்.பாஸ்கர், சாம்ஸ், மனோபாலா, சுப்புபஞ்சு ,தேனி முருகன், சண்முகசுந்தரம் நடித்துள்ளனர்.
போன தலை முறையின் பகை அடுத்தடுத்த தலைமுறையில் அப்பாவிகளையும் பாதிக்கும் கதை.
பிரபு, ஊர்வசி தம்பதிகளின் மகன் ஆரி. தென்னவன் ஸ்ரீரஞ்சனி தம்பதிகளின் மகள் மாயா. இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருக்கிறார்கள்.
ஒரு நாள் இவரும் வெளியூருக்கு ஓடுகிறார்கள் ஓடிப் போய் ட்டாங்க என்று ஊருக்குள் பற்றவைக்கிறார் ஒருவர்.
பிரபு, தென்னவன் முட்டி மோதிக் கொள்வார்கள் என்றால் சிரித்து ஸ்வீட் எடுத்து கொண்டாடுகின்றனர். இரு குடும்பங்களுமே இணைய ஆசைக் கனவுடன் இருந்துள்ளனர்.
ஊர் திரும்பிய ஜோடி ஊரில் நடக்கும் சந்தோஷ அமர்க்களத்தைப் பார்த்து அதிர்கிறார்கள். தங்கள் என்றுமே கீரியும் பாம்பும்தான் என்கிறார்கள்.
மாயாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. தனக்குள் புகுந்துள்ள ஆரி மீதான காதலை மாயா உணர்கிறார். முடிவு என்ன என்பதே கதை.
ஊர் ரெண்டுபட விரியும் ப்ளாஷ் பேக் காட்சியில் ஒரு கோழி முட்டையை முன்னிட்டே உறவுகள் உடைந்ததை காட்டியிருப்பது கலகலப்பு.படத்தில் வரும் கிராமம் அழகு. மக்கள் உற்சாகம் குளுமை. படத்தில் குடும்ப உறவு உயர்த்திப் பிடிக்கப் பட்டுள்ளது.
பாடல்கள் அதற்குத் துணை நிற்கின்றன. ‘ஊதே வெதட்டி வெதட்டி’ பாடல் சுவை. படம் முழுக்க குடும்பவிழா திருவிழாக்கோல உற்சாகம் தருகிறது. அபிராமி ராமநாதன் இன்றைய அவசர யுகத்துக்கு ஏற்ற அறுவை இல்லாத யதார்த்தமான கதையை எழுதியுள்ளார்.
இவ்வளவு பேரை மேய்த்து கலகலப்பான குடும்பப்படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆர்கே. ‘உன்னோடு கா’ படத்துக்குப் பழம் விடலாம்.