இசையமைப்பாளராக அறிமுகமாகி அந்தத் துறையிலேயே தனி இடம் பிடித்தவர்
விஜய் ஆண்டனி. ஹீரோவாக மாறியபின் நடிப்பிலும் முத்திரை பதித்து
வருகிறார். முன்னணி ஹீரோக்களுக்கு செம டஃப் ஃபைட் கொடுக்கும் விஜய்
ஆண்டனியிடம் நம்பியார் படத்துக்கு இசையமைத்த அனுபவத்தைக் கேட்டோம்.
சந்தானத்தை பாட வைத்த அனுபவம்?
ஸ்ரீகாந்த் சாரோட நட்புக்காகத் தான் அவர் பாடவே வந்தார். அவரை பாட
வெச்சதே செம ஜாலி அனுபவம். சொன்னா நம்பமாட்டீங்க… முக்கால் மணி
நேரத்துலயே ரெக்கார்டிங் முடிஞ்சுடுச்சு. வித்தியாசமா இருக்கட்டுமேன்னு
அந்த குத்துப்பாட்டை ஸ்லோவா கம்போஸ் பண்ணினோம்.
அப்ப டான்ஸும் ஸ்லோவாத்தான் இருக்குமா?
அந்த பாட்டுல ஒரு பகுதியில நானும் ஆடியிருக்கேன். அந்த பாட்டே
குடிச்சுட்டு பாடற ஆடற பாட்டு. கல்யாண் மாஸ்டர் தான் டான்ஸ்.
குடிச்சுட்டு டான்ஸ் ஆடினா எப்படி இருக்குமோ அதை அப்படியே கொண்டு
வந்துருக்கார்.
உங்க படங்கள்ல தீம் ரொம்ப பிரமாதமா இருக்குமே?
இதுலயும் இருக்கு. ஆனா யாருக்குங்கறது தான் ஸ்பெஷல். நமக்குள்ளயே
எம்ஜிஆரும் இருக்கார். நம்பியாரும் இருக்கார். எம்ஜிஆர் நம்பியாரை
ஜெயிச்சுட்டா நம்ம வாழ்க்கை நல்லாயிருக்கும். இந்த படத்தோட லைனே இதுதான்…
இந்த லைன் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது. நம்பியாருக்கு இதுல ஒரு
தீம்ஸாங் இருக்கு.
உங்க ஃபேவரிட் மெலடிகள் இதுலயும் உண்டா?
நிச்சயமா… எனக்கு எப்பவுமே மெலடி மேல விருப்பம் உண்டு. மெலடி ஸ்ட்ராங்கா
இருந்தாத்தான் மத்த குத்துப்பாட்டு கூட ஹிட் ஆகும். படத்துல மூணு மெலடி
ஸாங்ஸ் இருக்கு. இதுதவிர ஓடிட்டே இருக்கற மாதிரி ஒரு ஸாங் இருக்கும்.
அது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இருக்கும்.
பின்னணி இசை எப்படி இருக்கும்?
கதையை உணர்த்துறதுதானே பின்னணி இசை. ஒரு போர்ஷனை ஹைலைட் பண்ணிக்
காட்டுறதே பின்னணி இசை தான். இதுலயும் கதையை ஹைலைட் பண்றா மாதிரி பின்னணி இசை அமைஞ்சிருக்கும்.
இந்த படத்தோட ஸ்பெஷல் என்ன?
கதைதான். நாம எல்லோருமே நல்லவங்க மாதிரி வெளில நடிச்சுட்டு இருக்கோம்.
ஆனா எல்லோருமே ஒரு வகையில நம்பியார் தான். அப்படி நமக்குள்ளயே இருக்கற
நம்பியாருக்கு ஒரு ஒரிஜினல் உருவம் கொடுத்து நம்ம கூடவே ட்ராவல் ஆனா
எப்படி இருக்கும்… இந்த கற்பனை தான் நம்பியார் படம். இந்த ஐடியாவே எனக்கு
ரொம்ப பிடிச்சுருந்துச்சு.
ஸ்ரீகாந்த்?
அவருக்கு இது ரொம்ப முக்கியமான படம். நல்லா பண்ணியிருந்தார். அவரோட நிறைய
படங்கள் பார்த்துருக்கேன். நானும் நடிக்கிறதால எனக்கு அந்த கஷ்டம்
புரியும். என்னோட நடிப்பெல்லாம் எடிட்டிங், டப்பிங்ல தான் சரி செய்வோம்.
ஆனா ஸ்ரீகாந்த்லாம் அந்த வேலையே வைக்கலைனு நான் பின்னணி அமைக்கும்போதே
தெரிஞ்சது.
சந்தானம்?
இந்த படத்துக்கு பெரிய சப்போர்ட். அவர் மட்டும் தான் அந்த கேரக்டர் பண்ண
முடியும். அவர் படத்துலயே இதுவரைக்கும் பாட முயற்சி பண்ணலை. ஆனா இந்த
படத்துல பாடியிருக்கார். ரெக்கார்ட் பண்ணும்போது தான் பார்த்தேன். நைஸ்
பெர்சன். நல்லா பழகினார். படத்துல ஆர்யாவும் இருக்கார். படம் ரிலீஸ்
ஆவதும் சரியான நேரம் தான்.
இயக்குநர் கணேஷா?
நல்ல திறமையான இயக்குநர். அவர்கூட சேர்ந்து ஒரு படம் பண்ணனும்னு எனக்கும்
ஆசை இருக்கு. வருங்காலத்துல கண்டிப்பா ஒரு படம் பண்ணுவோம்.
காமெடியை இசையில கொண்டு வர்றது கஷ்டமாச்சே?
நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி அந்தந்த போர்ஷனை ஹைலைட் பண்ற மாதிரி பின்னணி இருக்கும். . ஒரு கமர்ஷியல்
படத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்துட்டு போய்ட்டே இருப்பேன்.
அப்படி இந்த படத்துக்கு கொடுத்ததுல நல்ல ஸாங்ஸ் வந்துருக்கு. பின்னணி
இசையும் அற்புதமா அமைஞ்சிருக்கு.
டான்ஸ் ஆடின அனுபவம்?
எனக்கு டான்ஸ்லாம் வராது. கூப்பிட்டாங்களேன்னு சும்மா போய் நின்னுட்டு
வந்தேன். அவ்வளவுதான்.