என் அப்பா பிச்சை எடுத்ததை நான் பார்த்தேன் : விஷால் உருக்கம்!

vishal-prsஎன்னுடைய தந்தை ஒரு படத்தை வெளியிட முடியாமல் பிச்சை எடுப்பதை பார்த்தேன் அதனால் தான் இந்த தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் நிற்கிறேன் என்றார்  விஷால்.!!

 

அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று விஷால் பேசியது ,

இந்த அணி இங்கு வந்திருப்பதற்கான காரணம் நல்லது செய்வதற்காகத்தான். நல்லது செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. ‘நலிந்து’ என்ற ஒரு பிரிவை போக்குவதற்காகத்தான் இந்த அணியினர் இங்கு அமர்ந்துள்ளார்கள். தமிழ் திரைப்பட உலகில் பொதுவாகவே பல சங்கங்கள் உள்ளன. அதில் நடிகர் சங்கத்தை எடுத்துக்கொண்டால் அவர்கள் அச்சங்க உறுப்பினர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் அவர்களை மட்டுமே சேர்ந்து அடையும். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை நாம் செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் தமிழ் திரையுலகத்தில் உள்ள அனைவரையும் சென்றடையும்.

தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் தமிழ் திரையுலகமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த பத்து வருடத்தில் நடக்காததை நடத்தி காட்ட வேண்டும் என்ற ஒரே அடிப்படையில் தான் நான் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இந்த அணி சார்பாக நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.

எனக்குத் தலைவர் என்ற விஷயம் எப்போது ஞாபகம் வரும் என்றால் கையெழுத்து போடும் போது மட்டும் தான்  வரும். மற்றபடி எனக்கு அது ஞாபகம் வராது. நான் தயாரிப்பாளர் சங்கத்தை முன்னேற்ற தான் வந்துள்ளேன் சங்கம் நன்றாக இருந்தால் இந்த திரையுலகம் நன்றாக இருக்கும் என்பது தான் உண்மை.

திரையுலகம் நன்றாக இருந்தால் பல குடும்பங்கள் நன்றாக இருக்கும். முன்பெல்லாம் என்னுடைய தந்தையை என்னுடைய படத்தை பார்க்கத்தான் அழைப்பேன். இப்போது நான் அவரிடம் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பேசுவேன். நல்லது பண்ணப் போகிறேன் என்பேன். அதே போல் இப்போது நடிகர் சங்கத்தில் நடிகர் சங்கம் நிர்வாகிகளோடு இனைந்து நாங்கள் சொன்ன அனைத்து விஷயங்களை எல்லாம் செய்துள்ளோம்.

நடிகர் சங்க கட்டடம் மிக விரைவில் அதாவது அடுத்த மாதம் நடிகர் சங்க கட்டட வேலை துவங்கவுள்ளது. நடிகர் சங்கத்தை பொறுத்தவரை நாங்கள் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டோம்.

நான் என்னுடைய தந்தையிடம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்க போகிறேன் என்று கூறியதும். என்னுடைய தந்தை எதற்காக நிற்க போகிறாய் என்று   கேட்டார் ?? … என்னுடைய தந்தை “ ஐ லவ் இந்தியா “ என்ற படத்தை எடுத்தார். என் தந்தை மகாபிரபு போன்ற வெற்றி படங்களை எடுத்தவர். என்னுடைய பள்ளி பருவத்தில் என் தந்தை ஒரு லேபில் நின்று பிச்சை எடுப்பதை நான் பார்த்தேன்.

அவர் அவர்களிடம் சொன்ன தேதியில் படத்தை வெளியிட வேண்டும் எனக்கு உதவுங்கள். நான் தவறேதும் செய்யவில்லை நான் செய்த ஒரே தவறு இந்த படத்தை எடுத்தது தான் என்றார். அவர் பிச்சை எடுத்ததை நான் கண்ணால் பார்த்தேன் நான் இந்த தேர்தலில் நிற்க காரணம் அதுவாகக் கூட இருக்கலாம். என்னுடைய தந்தை நடந்த அந்த கஷ்டம் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்காது இனிமேல். நீ தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்கிறாய் , உன்னை எதிர்த்து நிற்ப்பது எல்லாம் என்னுடைய நண்பர்கள் தான் , நான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினர் , தெலுங்குவிலும் உறுப்பினர். நீ இந்த தேர்தலில் நிற்கிறாய் என்றால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும்  கால் கிரவுண்டோ அல்லது அரை கிரவுண்டோ இடத்தை அளிக்க வேண்டும்.

இதைச் செய்தால் நீ நம் வீட்டிற்கு வா இல்லாவிட்டால் , வராதே என்றார் அதனால் தான் இந்த தேர்தலில் நிற்கிறேன். ”என்றார்.