கிராமத்துப் பின்னணியில் உயிரோட்டமான நகைச்சுவையுடன் வரும் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. இந்த வெற்றி வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் ‘யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ளவை’.
தமிழ்நாட்டில் பிரபலமான இந்தப் பழமொழிக்கு விளக்கம் தேவையில்லை. இந்தப் பெயரில் அறிமுக இயக்குநர் சுவாமிராஜா படம் இயக்கியுள்ளார் .
விஜய் ஆர். நாகராஜ் நாயகன், ப்ரியா மேனன் நாயகி. இருவருமே புதுமுகங்கள். தவிர சிங்கம்புலி, சுப்புராஜ், நெல்லை சிவா, தென்னவன், , ஹலோ கந்தசாமி,வெங்கல்ராஜ், போண்டாமணி என பெரிய நகைச்சுவைப் பட்டாளமே நடித்துள்ளது.
இரண்டு ஊர்கள் கதாபாத்திரங்கள் போல படத்தில் வருகின்றன. இரண்டு ஊர்களுக்கு இடையில் ஜென்மப் பகை. எலியும் பூனையுமாக அந்த ஊர்க்காரர்கள் இருக்கிறார்கள். பகையான ஊர்களிடையே உறவாட வருவது போல காதலர்கள் உருவாகிறார்கள். அதாவது எலியும் பூனையுமாக உள்ள ஊர்களிலிருந்து நகமும் சதையுமாக ஒரு காதல் ஜோடி உருவாகிறது .ஊர்ப்பகை இவர்களின் காதலால் பெரிதானதா மாறியதா என்பதே கதை.
காதலர்களை சேர்ந்து வைப்பதாக சிங்கம்புலி எடுக்கும் முயற்சிகள் படத்தில் விலாநோக சிரிக்க வைக்கும் காட்சிகள். ‘யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ளவை’ என்கிற தலைப்பே சிங்கம் புலிக்கே பொருந்தும்.
படத்தில் 6 பாடல்கள் ஆதிஷ் உத்திரியன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை KDFC கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.
படத்தில் வரும் கானாபாலா பாடிய பாடலான
‘அன்பு கெட்ட பொண்ணு மேல ஆசை உனக்கு எதுக்குடா
அவசரமா எதையும் செய்யும் பொண்ண தூர ஒதுக்குடா
இதயம் இல்லா பொண்ண நெனச்சி ஏங்குறத நிறுத்துடா
பாதை மாறி போகும் மனச பக்குவமா திருத்துடா’
என்கிற பாடல் கேட்டவருக்கெல்லாம் பிடித்துவிட்டது.
படத்துக்கு ஒளிப்பதிவு கிச்சாஸ் ,வெண்ணிலா சரவணன்.
கோவில்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், குற்றாலம், ராஜபாளையம், பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இப்படத்தின் இசை இன்று பிக் எப் எம் மில் வெளியிடப்பட்டது.