நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ கடமையை செய் “
பல வெற்றிப்படங்களை இயக்கியதோடு தற்போது பிரபல நடிகராகவும் உள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள்.
இயக்குநர் சுந்தர்.C தயாரித்து, நாயகனாக நடித்த “ முத்தின கத்திரிக்கா “ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய வேங்கட் ராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை இயகுகிறார்.

ஒளிப்பதிவு – வினோத் ரத்னசாமி
இசை – அருண்ராஜ்
கலை – M.G.முருகன்
எடிட்டிங் – N.B.ஸ்ரீகாந்த்
ஸ்டண்ட் – பிரதீப் தினேஷ்
நடனம் – தீனா, சாய் பாரதி
தயாரிப்பு மேற்பார்வை – R.P.வெங்கட்
மக்கள் தொடர்பு – மதுரை செல்வம், மணவை புவன்.
தயாரிப்பு – T.R.ரமேஷ், ஜாகிர் உசைன்
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்கள் குத்துவிளக்கேற்றி துவைக்கி வைத்தார். படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.