திரைப்பட இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான ஐக்கிய உலகநாடுகளின் இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகநாடுகள் கூட்டமைப்பின் துணை பொது செயலாளர் மற்றும் உலகநாடுகளின் பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் லக்ஷ்மி பூரி திரைப்பட இயக்குநர் , எழுத்தாளர் , ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் அவர்களை உலக நாடுகளின் பெண்களுக்கான இந்திய தூதுவராக நியமித்துள்ளார்.
ஐஸ்வர்யா அவர்கள் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றம் பற்றிய விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்து கூறுவார். ஆண் பெண் இருபாலருக்கும் சமமான உலகை2030க்குள் உருவாக்குவது தான் இதன் நோக்கமாகும். இதற்க்கு ” planet 50 – 50 ” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா தமிழில் முன்னணி இயக்குநர். இவர் 2015ஆம் ஆண்டு டென் என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் திறமை மிக்க இயக்குநர்கள் இயக்கும் குறும்படங்களையும் , மற்ற டிஜிட்டல் படைப்புகளையும் வெளியிட்டு வருகிறார். ஐஸ்வர்யாவின் கணவர் நடிகர் தனுஷ் அவர்களின் வுண்டர்பார் பிலிம்ஸ் எனப்படும் தயாரிப்பு நிறுவனத்தை அவருடன் இனைந்து இவரும் நிர்வாகித்து வருகிறார். தற்போது இவர் ” Standing On An Apple Box ” என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதி வருகிறார். இப்புத்தகம் சூப்பர் ஸ்டாரின் மகள் , தாய் , மனைவி என பன்முகம் கொண்ட அவருடைய வாழ்க்கையை பற்றி பேசும் படைப்பாக இருக்கும். மேலும் அவர் அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கான கதையை எழுதி வருகிறார்.
ஐஸ்வர்யா தென் இந்தியா மற்றும் அதை சுற்றியுள்ள பெண்களுக்கு நம்பிக்கையை கொடுத்து ஊக்குவிக்கும் ஒரு பெண்ணாக இருக்கிறார் என்றார் லக்ஷ்மி பூரி. பெண்களுக்கான சம உரிமையை எப்போதும் வலியுறுத்தி வரும் அவர் இதை பற்றிய விழிப்புணர்வை எல்லா இடத்திலும் ஏற்ப்படுத்தி பெண்களுக்கான சம உரிமையை பெற்று தர வழிவகுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார் லக்ஷ்மி பூரி.
”உலக நாடுகளின் பெண்களுக்கான அமைப்பின் இந்திய தூதுவராக இருந்து பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களுக்கான முன்னேற்றத்திற்க்காக வேலை செய்வது எனக்கு பெருமை அளிக்கிறது. பொது மற்றும் தனியார் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு. அரசியலில் பங்கேற்றல் மற்றும் நிர்வாக ரீதியான முக்கிய இடங்களில் முடிவெடுப்பதற்கான உரிமையை பெறுதல் தான் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கான முதல் படியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். என்னுடைய இந்த பதவியில் இருந்து பெண்களுக்கான முன்னேற்றத்திற்காக நான் எல்லா வித சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். பெண்களுக்கான சம உரிமையை பெற உடனடியாக நடவடிக்கை வேண்டும் என நான் நம்புகிறேன். நமக்கு 2030க்குள் ” Planet 50 -50 ” எனப்படும் நம்முடைய நோக்கும் நிறைவேற வேண்டும் அதற்க்கு இப்போதிலிருந்தே நாம் கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார் ஐஸ்வர்யா.
உலக நாடுகளுக்கான கூட்டமைப்பின் பெண்களுக்கான அமைப்பின் இந்தியாவிற்கான உறுப்பினரான டாக்டர். ரெபேக்கா ரிச்மான் டவேராஸ். உலக நாடுகளின் பெண்கள் கூட்டமைப்பின் இந்திய தூதுவராக ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இயக்குநராக , எழுத்தாளராக , நாடிய மங்கையாக அவருக்கு மக்களிடம் நல்ல அறிமுகமும் வரவேற்பும் உள்ளது.
ஐஸ்வர்யாவின் தந்தையும் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாருமான திரு. ரஜினிகாந்த் அவர்கள் கூறியதாவது. ”என்னுடைய மகளான ஐஸ்வர்யா எப்போதும் தன்னுடைய சொந்த காலில் நிற்கும் அளவுக்கு தன்னம்பிக்கையும் ஆற்றலும் பெற்றவர். அவர் யு.என் உடன் இணைந்து பெண்களுக்கான சம உரிமைக்காக பணியாற்றுவது எங்களுக்கு பெருமைக்குரிய மற்றும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். பெண்களுக்கான சம உரிமைக்காக அவர் செய்துள்ள பணிகளை நான் பாராட்டுகிறேன். அவர் செய்யும் இப்பணிகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன். ஒரு தந்தையாக உலகநாடுகளுக்கான பெண்கள் அமைப்பின் இந்திய தூதுவராக ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. அவர் பெருமைக்குரிய இப்பணியில் இருந்து பெண்களுக்கான சம உரிமை மற்றும் முன்னேற்றத்துக்காக பணியாற்றவிருப்பது எனக்கு மகிழ்ச்சியே. சம உரிமை என்பது பெண்களுக்கான ஒரு பிரச்சனை மட்டும் அல்ல ,அவர்களின் சம உரிமைக்காக நாம் அனைவரும் போராட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நிறுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு வீடுகளிலும் , அவர்கள் வேலை செய்யும் இடங்களிலும் சம உரிமை கிடைக்க வேண்டும் ”என்றார் ரஜினிகாந்த்.
புகழ் பெற்ற பாலிவுட் இயக்குநர் /நடிகர் பார்ஹான் அக்தர் , டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா , பிரிட்டிஷ் நடிகை எம்மா வாட்சன் , ஆஸ்கர் விருது பெற்ற நிக்கோல் கிட்மேன் மற்றும் அண்ணா ஹாத்வே , தாய்லாந்தை சேர்ந்த HRH Princess Bajrakitiyabha Mahidol ஆகியோரை தொடர்ந்து தற்போது பெண்களின் சம உரிமைக்காக மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்ற உலக நாடுகளின் பெண்கள் கூட்டமைப்புக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் ஐஸ்வர்யா.