கவுண்டமணி,யோகி பாபு,ரவிமரியா,O A K சுந்தர்,மொட்ட ராஜேந்திரன் , சிங்கமுத்து ,சித்ரா லட்சுமணன்,வையாபுரி,முத்துக்காளை,T R சீனிவாசன்,வாசன் கார்த்திக்,அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ் ,கூல் சுரேஷ்,சென்ட்ராயன். சதீஸ் மோகன்,இயக்குநர் சாய் ராஜகோபால்,நட்புக்காக டெம்பிள் சிட்டி குமார்,ராஜேஸ்வரி,தாரணி – லேகாஶ்ரீ, Dr. காயத்ரி,மணிமேகலை,மணவை பொன் மாணிக்கம் நடித்துள்ளனர்.
கதை.. திரைக்கதை..வசனம்.. இயக்கம் : சாய் ராஜகோபால்.கேமரா மேன் – S A காத்தவராயன்,எடிட்டர்- ராஜா சேதுபதி & நோயல்,ஆர்ட் டைரக்டர்- மகேஷ் நம்பி, இசை..சித்தார்த் விபின்.
அரசியலில் எதுவும் நடக்கும் எந்த மோசடி செய்தாவது பதவி பெறுவது தான் முக்கியம். எந்த அவமானத்தையும் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்று சொல்லிக் கொள்வார்கள்.எவ்வளவு கீழே உள்ளவர்களும் மேலே செல்வார்கள் .அப்படிப்பட்ட பாணியில் நையாண்டி கலந்து உருவாகி இருக்கும் படம் தான் ஒத்தை ஓட்டு முத்தையா . ஒரே ஒரு ஓட்டு வாங்கி அரசியலில் தோல்வியுற்ற முத்தையாவாக கவுண்டமணி வருகிறார்.ஒரே ஒரு ஓட்டு வாங்கியஅவர், எப்படி கட்சியை விட்டு வெளியேறி தனியே நின்று எம்எல்ஏவாக ஜெயிக்கிறார் ?அரசியலில் வெற்றி பெறுகிறார்?அதற்கு இடையே குடும்பத்தில் திருமணமாகாத மூன்று தங்கைகளுக்கும் மாமியார் தொல்லைகளை தவிர்க்க வேண்டும் என்று,ஒரே குடும்பத்தில் அண்ணன் தம்பிகளாகப் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அந்த மாப்பிள்ளை தேடும் படலங்கள் தனது அரசியல் கட்சிப் பயணங்கள் இரண்டையும் இணைத்து ஒரு முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாக்கி இருக்கிறார் சாய் ராஜகோபால்.
இத்தனை ஆண்டு காலமானாலும் கவுண்டமணி படத்தை ,தன் பாத்திரத்தின் மூலம் தூக்கி நிறுத்தி உள்ளார். வாயால் வசனம் பேசியே அனைத்தையும் சமன் செய்கிறார்.இந்த படத்தில் கவுண்டமணி,யோகி பாபு,ரவிமரியா,O A K சுந்தர்,மொட்ட ராஜேந்திரன் , சிங்கமுத்து ,சித்ரா லட்சுமணன்,வையாபுரி,முத்துக்காளை,T R சீனிவாசன்,வாசன் கார்த்திக்,அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ் ,கூல் சுரேஷ்,சென்ட்ராயன். சதீஸ் மோகன்,இயக்குநர் சாய் ராஜகோபால்,நட்புக்காக டெம்பிள் சிட்டி குமார்,ராஜேஸ்வரி,தாரணி – லேகாஶ்ரீ, Dr. காயத்ரி,மணிமேகலை,மணவை பொன் மாணிக்கம் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள்.அவரவர் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார்கள்.
படம் முழுக்க கவுண்டமணி பிராண்ட் காமெடிகள் கொடி கட்டிப் பறக்கின்றன. எந்த வசனம் சொன்னாலும் ஏறுக்கு மாறாக குதர்க்கமாகப் பேசி அவர் கவுண்டர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.கண்ணில் தென்படும் அனைவரையும் கலாய்க்கிறார். இந்த வகையில் படம் முழுக்க கிச்சு கிச்சு மூட்டல் சம்பவங்கள் நடக்கின்றன.இதற்கிடையே அவரது தங்கைகளுக்கு மாப்பிள்ளை தேடும் பகுதி பாதிப் படத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது.உருவக் கேலிதான் நகைச்சுவை என்கிற கவுண்டமணி பாணி இப்போது மாறி வருகிறது. ஆனால் இந்தப் படத்தில் அது நிறையவே உள்ளது ஓர் உறுத்தல்.
இந்த படம் முழுக்க முழுக்க கவுண்டமணியை மட்டும் நம்பி எடுக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்தால் அதன் வெற்றி சதவீதம் மேலும் கூடியிருக்கும். படத்தில் அன்றாட அரசியல் நம் சமீப காலங்களில் தென்படும் அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் கூத்துகளையும் காமெடி கலந்து காட்சிப்படுத்தியுள்ளார்கள். எனவே அனைவரும் அதைப் புரிந்து கொண்டு சிரிக்க முடியும். 100% சிரிப்புக்கு கேரண்டி இந்தப் படம்.
கவுண்டமணி படங்களுக்கு நகைச்சுவை பகுதி எழுதிவந்த சாய் ராஜகோபால்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். எனவே அவர் வரிகளையும் வசனங்களையும் மட்டும் அதிகம் நம்பி உள்ளார். காட்சிப்படுத்துதல்களில் அவருக்குக் கவனம் குறைவாகத்தான் இருந்துள்ளது. நிறைய காட்சிகளில் பேசிக்கொண்டே இருப்பது போல் ஒரு தோற்றம் இருக்கிறது.எழுத்தாளர் இயக்குவதால் வரும் பிரச்சினை அது. இருந்தாலும் ஒரு முழுப் படத்தையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் சிரிப்பதற்கு நோ லாஜிக் என்கிற நகைச்சுவை நோக்கில் நம்மைப் பார்க்க வைக்கிறார்.