நாயகனின் அப்பா தொழில் தொடங்க பணம் தர மறுப்பதால் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களின் உதவியுடன் தென்காசி ஜில்லா என்ற விளம்பரப் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கிறான். அதே தென்காசியில் வில்லன் பத்து வருடங்களாக தென்காசி பில்லா என்ற விளம்பர பத்திரிகையை அந்த வட்டாரத்தில் முன்னணி பத்திரிகையாக நடத்தி வருகிறான். இதனால் புதிதாக விளம்பரப் பத்திரிகை தொடங்குபவர்களை ஏதேனும் வழியில் சூழ்ச்சி செய்து அவர்களை தடுக்கிறான்.
இந்த விவரம் தெரியாத நாயகன் எப்படி தென்காசி ஜில்லா பத்திரிகையை நடத்தி தனது தொழிலில் அனைத்து தடைகளையும் தகர்த்து எவ்வாறு வெற்றி பெறுகிறான் என்பதை காதல், நகைச்சுவை கலந்து விறுவிறுப்பாக கூறும் படமே “பெப்பே”.
விஜய் அரவிந் கதாநாயகனாக அறிமுகமாக, பைசா படத்தில் நடித்த ஆரா கதாநாயகியாக நடிக்கின்றார். இவர்களுடன், பன்னீர், இமான் அண்ணாச்சி, ராமசந்திரன், தீனா, தேவிபிரியா, நெல்லை சிவா ஆகியோர் நடிக்கின்றனர்.
V.C.குகநாதன், மகேஷ், பாலன், ராமநாதன் ஆகிய இயக்குநர்களிடம், இணை மற்றும் துணை இயக்குநராய் பணியாற்றிய G.R.ராஜ்தேவ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படத்திற்கு இசை ஜெனி சாமுவேல், ஒளிப்பதிவு G.K.ரவிகுமார், படத்தொகுப்பு – C.கணேஷ்குமார்.
நடனம் – சத்தி சுபாஸ், நவதீப்
பாடல்கள் – மூ – ஜெகன் சேட் (அறிமுகம்)
தயாரிப்பு – TMR Team
தென்காசி, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, குற்றாலம், கொடைகானல் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு தேதி அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.