ஒரு புரட்சிகரமான சினிமா முயற்சி ‘டாக்ஸிக் ‘

யாஷின் ‘டாக்ஸிக் : ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்’ இந்தியாவின் பெரிய அளவிலான இரு மொழி திரைப்படமாக ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்டு, உலகளாவிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு வரலாறு படைக்கிறது.

யாஷின் ‘டாக்ஸிக்- ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ் ‘ உலகளாவிய பார்வையாளர்களுக்காக எல்லைகளைத் தகர்த்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகும்.

ஒரு புரட்சிகரமான சினிமா முயற்சியாக ‘டாக்ஸிக் ‘ என்பது ஆங்கிலம் மற்றும் இந்திய மொழி இரண்டிலும் கருத்தாக்கம் செய்யப்பட்டு, எழுதப்பட்டு, படமாக்கப்பட்ட முதல் பெரிய அளவிலான இந்திய திரைப்படமாகும். இந்திய மொழியான கன்னடத்தில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே உலகளாவிய திரைப்பட அனுபவத்திற்கு வழி வகுக்கும். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்யப்படும்.

சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இயக்குநர் கீது மோகன் தாஸ் எழுதி இயக்கிய, ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ – பல்வேறு கலாச்சார ரீதியிலான கதை சொல்லலை மறு வரையறை செய்ய தயாராக உள்ளது. ஆங்கிலம் – கன்னடம் என இரு மொழிகளிலும் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம், உலகளாவிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. கன்னடம் – இந்திய பார்வையாளர்களுக்கான நுணுக்கங்களை படப்பிடிக்கிறது. அதே தருணத்தில் ஆங்கிலம் – உலகளாவிய பார்வையாளர்களின் அணுகு முறையை உறுதி செய்கிறது. இது திரைப்பட தயாரிப்பாளர்களின் நம்பகத் தன்மை மற்றும் பன்முக தன்மை கொண்டு அணுகி இருப்பதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” டாக்ஸிக் படத்திற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வை- இந்தியாவிலும், உலக அளவில் உள்ள பார்வையாளர்களுடன் உண்மையாகவே எதிரொலிக்கும் ஒரு கதையை உருவாக்குவதாகும். கதையின் நுணுக்கங்களை கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பிரத்யேகமாக படமாக்க நாங்கள் உழைத்துள்ளோம். இது பல்வேறு மொழியியல் மற்றும் கலாச்சார பின்னணியில் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு நிஜமான அனுபவத்தை உறுதி செய்கிறது. டாக்ஸிக் – கலை பார்வை மற்றும் வணிக ரீதியிலான கதை சொல்லலின் துல்லியத்தை ஆராய்கிறது. இது நிலவியல் எல்லைகள்- மொழிகள் மற்றும் கலாச்சார வரம்புகளையும் எல்லாம் கடந்து உலகெங்கிலும் உள்ள இதயங்களுடனும், மனங்களுடனும் இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பயணம்” என்றார்.

கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா இணைந்து தயாரித்திருக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படம் உலகளாவிய சினிமா அனுபவமாக கருதப்படுகிறது. இதில் பாக்ஸ் ஆபீஸ் நிகழ்வாக… யாஷ் மற்றும் சான்டான்ஸ் திரைப்பட விழா மற்றும் டொரன்டோ திரைப்பட விழா உள்ளிட்ட பல சர்வதேச தளங்களில் விருதினை வென்ற கீது மோகன் தாஸ் ஆகியோருக்கு இடையேயான கூட்டு முயற்சியின் தொலைநோக்கு பார்வையையும் பிரதிபலிக்கிறது. ஜான் விக் மற்றும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் புகழ்பெற்ற ஜே. ஜே. பெர்ரியின் அதிரடி சண்டைக்காட்சிகள் மற்றும் டூன் : பாகம் இரண்டிற்கான சிறப்பு விஷுவல் எஃபெக்ட்ஸிற்காக பாஃப்டா திரைப்பட விருதை வென்ற ‘டி என் இ ஜி’ யின் விசுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச குழுவினர் படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். இது உலகளாவிய அணுகுமுறையை மேலும் உறுதிப்படுத்துகிறது. நேர்த்தியான கதை சொல்லல் மற்றும் வித்தியாசமான நோக்கம் ஆகியவை இடம் பிடித்திருப்பதால்.. இந்த திரைப்படம் இரண்டு மொழிகளிலும் உருவாக்கப்பட வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வழி வகுத்தது.

கடந்த மாதம் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் பிறந்த நாளன்று ‘டாக்ஸிக்’ உலகத்தை பற்றிய ஒரு பார்வையை வழங்கும் ‘பிரத்யேக பிறந்தநாள் பார்வை’ எனும் பெயரில் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த டீசர் குறிப்பிடத்தக்க உற்சாகத்தை உண்டாக்கியது. அத்துடன் படத்தின் பட்ஜெட் மற்றும் சர்வதேச தரத்திலான தயாரிப்பின் மதிப்பினையும் எடுத்துக்காட்டியது.

இரு மொழி இயல்புக்காக விரிவான தயாரிப்பு மற்றும் நீட்டிக்கப்பட்ட படப்பிடிப்பு நாட்கள் தேவைப்பட்டன.‌ இப்படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியது. திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு அதிவேகமான உலகத்தை உருவாக்குவதில் முதலீடு செய்துள்ளனர். இது உயர்தரமிக்க மற்றும் உலகளாவிய இந்திய திறமைசாலிகளின் குழுவை ஒருங்கிணைக்கிறது. இந்த அம்சங்கள் இணைந்து திட்டத்தின் பட்ஜெட் மற்றும் கால அவகாசத்திற்கு பங்களித்துள்ளன. இந்த அம்சங்கள் அனைத்தும் ‘டாக்ஸிக்’கை இன்று வரை மிகவும் விலை உயர்ந்த இந்திய தயாரிப்புகளில் ஒன்றாக நிலை நிறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா பேசுகையில், ” டாக்ஸிக் படத்திற்கான எங்களுடைய குறிக்கோள் மிக தெளிவாக இருந்தது. இந்தியாவிலும், உலக அளவிலும் எதிரொலிக்கும் ஒரு படம். தொடக்கத்தில் இருந்து இந்த கதையிலும், அதன் ஆற்றலிலும் ஏற்பட்ட ஆழமான நம்பிக்கையால் நாங்கள் உந்தப்பட்டோம். இது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த சினிமா அனுபவத்தை உயிர்ப்பிக்க தேவையான எங்களின் ‘ஆல்- இன்’ அணுகுமுறையை தூண்டியது. டாக்ஸிக் உலக அளவில் பார்வையாளர்களை கவர்வதுடன், உலக அரங்கில் இந்திய சினிமாவின் திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இந்த சவாலை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்” என்றார்.