பொதுவாக நேர்காணல் என்றாலே நம் அனைவருக்கும் ஒரு விதமான பயம் இருக்கும், ஆனால் விரைவில் வெளியாகும் ‘தாயம்’ படத்தில் நடைபெற இருக்கும் நேர்காணலானது, அந்த பயத்தையும் ஒரு படி மேலே எடுத்து செல்ல இருக்கிறது.
கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி விஜய் சேதுபதி வெளியிட்ட ‘தாயம்’ படத்தின் டீசரே அதற்கு ஒரு சிறந்த உதாரணம். ‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்’ சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தாயம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார், குறும்படங்களை இயக்குவதில் கலை நயம் படைத்த அறிமுக இயக்குநர் கண்ணன் ரங்கசாமி. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியான இந்த தாயம் படத்தின் டீசரானது தற்போது யூடூப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை எட்டியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே அறையில் படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘தாயம்’ ஆகும்..

