தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல், பிகில் மற்றும் தெலுங்கில் வெளியான கிராக் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் G.K.விஷ்ணு – P.மஹாலக்ஷ்மி திருமணம் இன்று (25-04-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் இனிதே நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக காலை 8.30க்கு AM மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.