தூர்தர்ஷனில் நியூஸ் ரீடராக இருக்கும் நரேனின் மகன் அதர்வா. அப்பா வழியில் மீடியாவில் பெரிய ஆளாகி பிபிசியில் வேலைக்குச் சேர்வது அவரது கனவு. இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபடியே ஸ்கை டிவி என்கிற சிறிய சேனலில் வேலை பார்க்கிறார். ஒரு நாள் பிபிசியிலிருந்து அழைப்பு வருகிறது.ஆனால் திடுதிப்பென அதர்வாவை போலீஸ் பிடித்துக் கொண்டு போகிறது. கேட்டால் போலிச் சான்றிதழ் கொடுத்து வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சொல்கிறார்கள்.
அதிர்ந்து போன அதர்வா. சாரம்பபட்டு வெளியே வருகிறார். வந்தவர்,போலிச் சான்றிதழ் மோசடிக்கான வேரைக் கண்டுபிடித்து கிள்ளியெறிவதே கதை.
அதர்வா எப்போதும் உழைப்புக்குப் பஞ்சம் வைக்காதவர் படம் முழுக்க அவரது வியர்வையில் நனைந்து வந்திருக்கிறது.
குடும்பத்தில் வாழ்க்கையில் முன்னேறாத பிள்ளையாக பழிச்சொல் சுமந்து திரியும் போது இரக்கம் கொள்ள வைக்கிறார்., கேத்தரின் தெரசாவிடம் பிபிசி நிருபர் என்று பொய் சொல்லி காதலில் விழுந்து வழிவது என்று கல கலக்கிறார். இறுதியில் போலிச் சான்றிதழ் நெட் ஒர்க்கின் ஆணிவேர் தருண் அரோராவைச் சந்தித்ததும் எடுக்கும் ஆவேச ஆட்டம் பிரமாதம்.
அதர்வா போல கேத்தரினும் படத்தில் செம ஏங்கு தாங்காக இருக்கிறார் .பாடல் காட்சிகளில் நமீதாவை தாண்டி கெட்ட ஆட்டம் போடுகிறார்
திடுதிப்பென வந்து தமிழில் அறிமுகமாகியுள்ள தருண் அரோரா வில்லத்தன நடிப்பில் கூட நேர்த்தி காட்டியுள்ளார்.
பிரச்சினை என்கிற டெம்ளேட்டில் அடங்கிய கதையாக போலிச் சான்றிதழ் விவகாரமும் இருப்பது படத்தின் பலவீனம். மற்ற படி பலரும் சோடை போகாத உழைப்பை வழங்கியுள்ளனர் .ட்ரம்ஸ் சிவமணி வழக்கமான பார்முலாவில் இல்லாமல் பின்னணியில் பின்னியுள்ளார். சபாஷ்.
பலவீனங்களை மறக்க வைக்கும்படி விறுவிறுப்பான படமாக தந்திருப்பது இயக்குநர் சந்தோஷின் திறமை.