தமிழகத்தில் வீட்டுக்கு வீடு கழிப்பறை என்கிற திட்டத்தில் ஊழல் செய்து மக்களுக்குத் தரப்பட்ட பணத்தில் நூறு கோடி ரூபாயை சுருட்டுகிறார் அமைச்சர். அந்தக் கறுப்புப் பணத்தையெல்லாம் மலேசியாவிற்கு ஹவாலா மூலமாக அனுப்பி அங்கிருந்து கொலம்பியாவில் வங்கிக்கணக்கில் போடுவது என்பது திட்டம். ‘வானமே எல்லை’ படத்தில் ஒரு பணப்பெட்டி பயணம் செய்வது போல அங்கே அந்த ஹவாலா பணம் போகும் பாதை மற்றும் பயணம் பற்றிய கதைதான் ‘கண்லகாச காட்டப்பா’ படம்.
நூறு கோடி பணத்தைக் கொண்டு செல்லும் விச்சு விஸ்வநாத்தை ப் பின் தொடர்ந்து சென்று மலை விழுங்கி சாந்தினி, திருட்டு தாதா கல்யாண், அவரது ஏடாகூடசிஷ்யன் யோகி பாபு எல்லாருமே அந்தப் பணத்தைஅபகரிக்க முயல்கிறார்கள்.
சாந்தினி, யோகி பாபு, கல்யாண் குழு ஒருபக்கம் ,அதே நேரம் இன்னொருபுறம் பணத்தைச் சுருட்ட எம்.எஸ்.பாஸ்கர், அஷ்வதி குழு ஒரு பக்கமும் முயல்கிறது., இன்னொரு பக்கமும், தனியார் டிடெக்டிவ் ஏஜென்ட் மூன்றாவது பக்கமுமாக முட்டி மோதுகிறார்கள்.
கடைசியில் அந்த நூறு கோடி ரூபாய் என்ன ஆனது..? யார் கையில் கிடைத்தது என்பதுதான் சுவாரஸ்யமான கிளைமாக்ஸ்.
நகைச்சுவை கலந்த படத்தை இயக்கம் செய்வது அத்தனை சுலபமல்ல. அதிலும் முதல் படத்திலேயே அதனைச் செய்து காண்பித்திருக்கிறார் இயக்குநர் மேஜர் கெளதம்
‘சென்னை-28’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் அரவிந்த் இதில் முக்கிய நாயகன் . கவனிக்க வைத்திருக்கிறார். அதேபோல் விச்சு விஸ்வநாத் இந்தப் படத்தில்தான் அதிகமான காட்சிகளில் வருகிறார்.
சாந்தினி, அஷ்வதி இருவருக்குமே நடிக்க சம அளவுக் வாய்ப்பு. இருவருமே அழகாக வருகிறார்கள்,அழகாக நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவில் இதுவரை நாம் பார்த்திராத பல மலேசிய இடங்களை காண்பித்திருக்கிறார்கள். பாடல் காட்சிகளும் அழகு. கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்டுகள் எதிர்பாராதவை. ஆனால் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
திவாகர் சுப்ரமணியத்தின் இசையில் ‘கண்ல காச காட்டப்பா’ பாடலே தனியாக ஒலிக்கிறது. மற்ற பாடல்கள் சுமார்.
மேஜர் கெளதம் இயக்கியிருக்கும் முதல் படம் இது.கேள்வி கேட்காமல் பார்த்தால் கவலையை மறந்து சிரித்துவிட்டு வரலாம் அதற்கான உத்திரவாதம் உண்டு.