
பெண் ரசிகர்கள் பெருகிக்கொண்டே வரும், தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. தங்களது படங்களின் சென்சார் சான்றிதழ்களுக்கு என்றுமே முக்கியத்துவம் தரும் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அவர்களுடைய நிறுவனம் ஸ்ரீ சாய் ராம் creations விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணையும் படம் ‘கருப்பன்’. இப்படத்தை இயக்குநர் பன்னீர் செல்வம் இயக்குவதினால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.
இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர், எந்த வித தயக்கமுமின்றி ‘யு’ சான்றிதழ் தந்துள்ளனர். இந்த செய்தி இப்படக்குழுவினரை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சான்றிதழ் இப்படடம் குடும்பத்துடன் கண்டு ரசிக்கக்கூடிய படம் என்பதை மேலும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இதனால் இப்படத்தின் வணிக திறனும் பல மடங்கு உயர்ந்துள்ளது.