ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில்
நடிகர் கலையரசன் பேசியதாவது…,
“நான் சின்ன பாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறேன். ஆனால் அது முக்கியமான பாத்திரமாக இருக்கும். இயக்குநர் மகிழ் சொல்லித்தரும் விதம் புது அனுபவமாக இருந்தது. உதயநிதி சார் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. அவர் இதில் புது பரிமாணத்தில் இருப்பார். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை.”
நடிகை நிதி அகர்வால் பேசியதாவது..,
“இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கும், நடிகர் உதயநிதி சார் அவர்களுக்கும் நன்றி. அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் பங்கேற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்.”
நடிகர் ஆரவ் பேசியதாவது..,
“ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு இந்த படத்திற்காக நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த படத்தின் இசை ஈர்க்கும் படி அமைந்துள்ளது. இயக்குனர் மகிழ் உடைய ரசிகனாக இருந்த எனக்கு வாய்ப்பளித்த மகிழ் திருமேனி சாருக்கு நன்றி. அவரிடம் நிறைய கற்று கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னை இந்தப் படத்தில் முழுவதுமாய் அவர் தான் மெருகேற்றியுள்ளார். அடுத்தாக இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த உதயநிதி சாருக்கு நன்றி.”
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசியதாவது…,
“இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த உதயநிதி அவர்களுக்கு நன்றி. இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பான பணியை கொடுத்துள்ளனர். இயக்குனர் மகிழ் உடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது, நிறைய கற்றுக்கொண்டேன். படம் வெற்றியடைய உங்கள் ஆதரவு தேவை. நன்றி
பாடலாசிரியர் கார்கி பேசியதாவது…
இயக்குநர் மகிழ் எனது மிகச்சிறந்த நண்பர். அவர் படங்களில் பாடல் எழுதுவது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். அவர் பாடலுக்கு தரும் தருணங்கள் வித்தியாசமாக இருக்கும். இந்த படத்தில் பாடல் எழுதிய அதே நாளில் தமிழக அரசுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கு பெறும் பாடல் ஒன்றையும் எழுதினேன். அப்பாவிற்கும் மகனுக்கும் ஒரே நாளில் பாடல் எழுதிய பெருமை கிடைத்தது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவருக்கு இது திருப்புமுனை படமாக இருக்கும். படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
ஒளிப்பதிவாளர் தில் ராஜு பேசியதாவது..
ரெட் ஜெயன்ட், உதயநிதி ஸ்டாலின், மகிழ் திருமேனி உடன் இணைந்தது மகிழ்ச்சி. என்னுடைய பாணியை மாற்றி, இதில் பணியாற்ற வைத்த இயக்குநருக்கு நன்றி.
நடிகர் பாபி சிம்ஹா பேசியதாவது…
“படத்தின் விஷுவல்ஸ் மிகவும் ஆழமாக இருக்கிறது. காட்சிகளை பார்க்கும் போது உதயநிதி சார் ஸ்டைலாக இருக்கிறார். படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.”
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,
“லவ் டுடே படத்தின் வெற்றிக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றிகள். இந்த படத்தின் டிரெய்லர் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மகிழ் திருமேனி சாருடைய படத்திற்கு நான் எப்பொழுதும் ரசிகன். இந்த படம் பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.”
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது..,
“இயக்குநர் மகிழ் திருமேனி உடைய திரைப்படங்கள் எப்போதும் ஆழமான கதையுடன் இருக்கும். கதாபாத்திரங்களில் எப்போதும் ஒரு அமைதி இருக்கும். அவரது படத்தின் காதல் காட்சிகள் சிறப்பானதாக இருக்கும். இந்த படத்திலும் அது இருக்கும் என்று நம்புகிறேன். உதயநிதி சார் உடன் பயணித்த அனுபவம், எனக்கு முக்கியமான அனுபவமாக இருந்தது. படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றிகள். இந்த படம் பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.”
நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது..,
“உதய் அண்ணா தொடர்ந்து சீரியஸான படங்களை செய்து வருகிறார். அதற்கு எனது வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். படத்தின் டிரெய்லர் சிறப்பாக இருக்கிறது. படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.”
இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது..,
இயக்குநர் மகிழ் திருமேனி உடைய திரைக்கதைக்கு நான் பெரிய ரசிகன். அவரது தடம் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். உதய் சார் உடன் பணியாற்ற முயற்சித்து இருக்கிறேன், ஆனால் அது நடைபெறவில்லை. அவருடைய திரைப்பயணத்துக்கு எனது வாழ்த்துகள், அவர் தொடர்ந்து சினிமாவிற்கு பல நன்மைகளை செய்து வருகிறார். இந்த படம் மாபெரும் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.”
நடிகர் அருண் விஜய் பேசியதாவது..,
“இயக்குனர் மகிழ் திருமேனி உடைய எழுத்துக்கு நான் எப்பொழுதும் ரசிகன். அவர் நிறைய நுணுக்கங்களை படத்தில் சேர்ப்பார். இந்தப் படம் கண்டிப்பாக அவருடைய அர்பணிப்புக்கு பெரிய வெற்றியை கொடுக்கும். உதயநிதி சாருக்கு இந்த படம் புது பரிணாமமாக இருக்கும். அவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிபடமாக அமையும். அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் அருண் ராஜா காமராஜ் பேசியதாவது..,
“படத்தில் ஆக்சன் காட்சிகள் நன்றாக இருக்கிறது. அதை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இந்த கலகத் தலைவன், நிறைய கலகத்தை உருவாக்கி, அதை தீர்க்கும் தலைவனாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.”
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசியதாவது..,
“இந்த படத்தின் டிரெய்லர் ஒரு நல்ல படத்திற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. படத்தின் டிரெய்லர் சிறப்பாக இருக்கிறது . உதயநிதி சார் உடைய திரைப்பயணத்தில் இது முக்கிய படமாக அமைய எனது வாழ்த்துக்கள். படத்தில் பங்கேற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.”
இயக்குநர் M ராஜேஷ் பேசியதாவது…,
“உதயநிதி ஸ்டாலின் காமெடி படங்கள் செய்வார் என நினைத்தேன், தற்போது நிறைய சீரியஸான படங்களை செய்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போது அட்டகாசமாக இருக்கிறது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி பேசியதாவது..,,
” திரைக்கதைக்கு மகிழ் திருமேனி கொடுக்கும் ஆழமான தகவல்கள் தான் அவரது பலம். அது இந்த படத்திலும் இருக்கிறது. உதயநிதி அவர்களுக்கு சினிமா மேல் அதிக பற்றுள்ளது. அவர் சினிமாவிற்கு பல நன்மைகளை செய்துவருகிறார். படம் சிறப்பாக வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.”
இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,
“உதய் உடன் பயணித்தது மிகச்சிறந்த அனுபவமாக எனக்கு இருந்தது. உதயநிதி ஸ்டாலின் திரையில் அறிமுகப்படுத்த வேண்டியது நான் தான். ஆனால் அது நடக்கவில்லை. அவருடன் சைக்கோவில் பணிபுரிந்தேன், அவர் பணிவில் மிகச்சிறந்த நபர். அவருடன் வேலை பார்ப்பது அலாதியான அனுபவமாக இருக்கும். அவர் அர்ப்பணிப்பான நபர். அவர் தொடர்ந்து படங்கள் செய்ய வேண்டும். படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது, இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று தோன்றுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் மகிழ் திருமேனி பேசியதாவது..,
” படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த விழாவிற்கு வந்த முக்கிய பிரபலங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். கலையரசன், ஆரவ் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். உதயநிதி சார் எப்பொழுதும் பணிவாக இருக்க கூடிய நபர், அதனால் தான் அவர் இந்த உயரத்தில் இருக்கிறார். இந்த 10 வருடத்தில் அவர் தொடர்ந்து பல படங்களில் வித்தியாசமான பல கதாபத்திரங்களை ஏற்று அதை நம்பும் படி உருவாக்கியுள்ளார். இந்த படமும் அப்படி தான் இருக்கும், இந்த படம் உங்களை ஏமாற்றாது. எனக்கு இந்த வாய்ப்பளித்த உதயநிதி அவர்களுக்கு நன்றி. “
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது..,
“கலகத் தலைவன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் எனது நன்றிகள். மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை செதுக்கி இருக்கிறார். அவர் நிறைய நேரம் செலவழித்து, சிறப்பான காட்சிகளை தொகுத்து உருவாக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு பெரிய உழைப்பும், அர்பணிப்பும் கொடுத்துள்ளோம். இயக்குனர் மகிழ் திருமேனி சிறப்பான படத்தை உருவாக்கி கொடுத்துள்ளார். இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. “
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படம் நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.