ஒரு வணிக சாதனம்தான் ஒவ்வொரு படமும் அறிமுகப் படுத்தும் போது கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கிறோம். பார்த்து ஆதரவு தாருங்கள் என்றே அனுதாபம் தேடும் வகையில் பேசுவார்கள். கஷ்டப்பட்டு படம் எடுத்ததே ஒரு தகுதியாகிவிடுமா?
உங்கள் படத்தை ஏன் பார்க்கவேண்டும் என்றால் பதில் இருக்காது.
ஆனால் ‘ களம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுவிழாவில் படத்துக்கு கதை எழுதி ,தன் தந்தையை வைத்து தயாரித்துள்ள சுபீஷ்சந்திரன்,’களம்’ படத்தை ஏன் பார்க்கவேண்டும் என்று அவரே கேள்விகேட்டு பதிலும் சொன்னார்.
” இது ஒரு ஹாரர் படம்தான். ஆனாலும் சென்சிபிலான படம் . ஹாரர் படம் ல்ன்றால் லாஜிக் இருக்காது. இதில் லாஜிக்குடன் கதை இருக்கும். சென்சிபில், லாஜிக், ஹாரர் முன்றும் இணைந்து இருக்கிற படம். நம்பி டிக்கெட்டுக்கு ரூ 120 கொடுத்தோ 10 ரூபாய்கொடுத்தோ படம் பார்க்க வருகிறவர்களுக்கும் டிக்கெட்டுக்கு 120ரூபாய், பாப்கானுக்கு120ரூபாய், பார்க்கிங்கிற்கு 100ரூபாய் கொடுப்பவர்களுக்கும் கூட திருப்தி அளிக்கும். அந்த வகையில் எங்கள் பொறுப்பை உணர்ந்து எடுத்துள்ளோம். எல்லாரையும் இப்படம் திருப்தி செய்யும் “என்றார் .
இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது “சில படங்களின் விளம்பரங்களைப் பார்க்கும் போதும், படக்குழுவினரைப் பார்க்கும் போதும் இந்தப் படம் ஓடவேண்டும் என்று தோன்றும் .அப்படித்தான் ‘களம்’ படத்துக்கும் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்,” என்றார்.
முதல் படமாக களத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராபர்ட்ராஜ் பேசும் போது” படம் எடுப்பது இப்போது சுலபம். வெளியிடுவதுதான் சிரமம். ‘களம்’ பார்த்துவிட்டு எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்சார் வெளியிடச் சம்மதித்து முடிவாகியது முதல் எங்கள் பாரத்தை தோளில் சுமந்து கொண்டார்.
இன்றைக்கு உதவி இயக்குநர்ளை கை தூக்கிவிட யாரும் வருவதில்லை. படம் பற்றி கோகுல், ஏ.எல்.விஜய், சுசீந்திரன், வெங்கட்பிரபு எல்லாம் பேசி வாழ்த்திப் படத்தைஉயரே தூக்கி விட்டார்கள். இதற்கு பாடல் கபிலின் வைரமுத்து.அவர் எழுதிய பாடல் என்க்கே புரியவில்லை. அர்த்தம் கேட்டேன். புரியவில்லையா என்றார்.எனக்கே புரியவில்லை என்றால் படம் பார்ப்பவனுக்கு எப்படி புரியும் என்றேன்.
வாரம் 5 பேய்ப்படம் வரும்போது இதை எப்படி பார்ப்பார்கள்? இப்போது குழந்தைகள் கூடபேய்ப்படம் பார்த்து பயப்படுவதே இல்லையே என்று பேசுகிறார்கள். சிலர் அப்படி நினைக்கலாம். ஆனால் இது பிடிக்கும் ஏனென்றால் இதில் லாஜிக்குடன் கதை இருக்கும். சென்சிபில், லாஜிக், ஹாரர் முன்றும் இணைந்து இருக்கிற படம். ” என்றார்.
அருள் மூவீஸ் பிலிட் சார்பில் பி.கே.சந்திரன் தயாரித்துள்ள ‘களம்’ ஏப்ரல் 29ல் வெளியாகிறது.இப்படத்தை எஸ்கேப் ஆர்ட் டிஸ்ட் மதன் வெளியிடுகிறார்.