இதுவரை காமெடி கலந்த நாயகனக வலம் வந்த சிவகார்த்திகேயன் ,ஆக்ஷன் நாயகனாக முயன்றுள்ள படம் ‘காக்கிசட்டை’
இன்ஸ்பெக்டர் கனவிலிருக்கும் சிவகார்த்தி கேயன் சாதாரண கான்ஸ்டபிளாகவே வர முடிகிறது. வேலைக்குச் சேர்ந்த புதிதில் அநீதி கண்டு பொங்குகிறார். ‘உனக்கு பொங்குவதற்கு உரிமையில்லை. மேலதிகாரி இட்ட வேலையை பணிந்து பணியாற்றுவது தான் உன்வேலை ‘என்று அவமானப் படுத்தப் படுகிறார்.
அநியாயமாக ஒரு கேஸ் திசைமாறுவதைக் காண்கிறார். \பெரிய கேஸை ஆதாரத்துடன் பிடி பிறகு பெரியாளாக வா.ய. என சீண்டி விடப்படுகிறார். அப்படி ஒரு கேஸ் கிடைக்கிறது. வெளிமாநிலத் தொழிலாளர்களை மூளைச்சாவு ஏற்படுத்தி அவர்களது உடலுறுப்பு திருடப்படும் விபரீதம் தெரியவருகிறது. அதை எப்படி கண்டுபிடிக்கிறார். போலீஸ் என்பதை மறைத்து காதலிக்கும் ஸ்ரீதிவ்யாவை எப்படித் திருமணம் செய்து கொள்கிறார். என்பதே கதை.
போலீஸ் கதை என்றதும் படம் முழுக்க காக்கிசட்டையில் வந்து போரடிக்காமல் எடுத்துள்ளனர்.
சிவா. போலீஸ் என்பதை மறைத்துக் காதலிக்கும் காட்சிகளில் கலகலப்பாக வருகிறார். அவரும் ஸ்ரீதிவ்யா வும் தோன்றும் காட்சிகளில் இளமை.
மூளைச்சாவு விஷயம் புதிதாக இருக்கலாம் ஆனால் சொல்லப்பட்ட காட்சிகளில் பல ‘சாரி ரொம்ப ஓவர் ‘ரகம் .எனவே நம்பகமில்லை.
அத்தனை ஓட்டைகளையும் மறந்து மன்னிக்க வைப்பவை சிவகார்த்திகேயனின் கலகலப்பு காட்சிகள்தான் .காக்கிசட்டை அவருக்கு அவ்வளவாக ஒட்டவில்லை .காக்கிசட்டை முடமுட ப்பு குறைவு