காயத்ரி ரகுராம் இயக்கும் ‘யாதுமாகி நின்றாய் ‘ : நடனப்பெண்ணின் அவலம் பேசும் கதை!

gayathri-raghuramகவர்ச்சிகரமான சினிமா உலகில் யாருக்கும் தெரியாது மறைந்திருக்கும்,உலகம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை. இதன் அழுகுரல் உலகத்தால் கட்டாயம் கேட்கப்பட வேண்டும்.

ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையக்கதையாக கொண்ட படம் தான் ‘யாதுமாகி நின்றாய்’.  பின்னணி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மைக்  கதைகளை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை காயத்ரி ரகுராம் இயக்குகிறார்.
இந்தப் படம் சாதாரண பின்னணி நடனமாடும் பெண்களின் மனதினுள் இருக்கும் கனவுகளையும், ஆசைகளையும் முதன் முதலில் தமிழ்ச் சினிமாவில் சொல்லும் படமாகும்.
குடும்பச் சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக  தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதாரண கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையில் பயணிக்கிறாள். ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்குக் கொடுமைகளையும்  அவலங்களையும் அனுபவிக்கிறாள். அவளது  அந்த அவல வாழ்க்கையே  ‘யாதுமாகி நின்றாய் ‘ படத்தின் கதையாகும்.
தாமரை போன்ற நடனப்பெண் இருபதாண்டு காலமாக அவள் வாழ்நாளில் சந்தித்த மற்றும் பயணித்த பல்வேறு நபர்களின் கதையைச் சொல்கிறது  இந்த ‘யாதுமாகி நின்றாய் ‘ படம்.
இது நம்பிக்கையின் கதை, இளம்பெண்ணின் கதை,  மனதால் உணரப்பட வேண்டிய இக்கதை நீண்ட நாள் நிலைத்து நிற்கும்  என நம்பிக்கையுடன் உள்ளது படக்குழு.