சுதந்திரமாக வாழ்வது ஆரோக்கியமாக வாழ்வது விரும்பிய கொள்கை பின்பற்றுவது எப்படி அடிப்படை உரிமையோ அதேபோல் கல்வி நமது பிறப்புரிமை என்று அடித்துச் சொல்லி இருக்கிறது காலேஜ் ரோடு படம்.
மோனிகா, ஆனந்த்நாகு,அக்சய்கமல், பொம்முலக்ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவிபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இசை – ஆப்ரோ,ஒளிப்பதிவு- கார்த்திக் சுப்ரமணியம்.எடிட்டர்- அசோக்
MP எண்டர்டெயின்மெண்ட் பிரவீன் மற்றும் சரத். இவர்களுடன் ஜனா துரைராஜ் மனோகர் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராகச் சேர்கிறார் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றைக் கண்டு பிடித்துள்ள லிங்கேஷ் அதைமேல் எடுத்துச் செல்ல விரும்புகிறார்.
அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷ்க்கும் வங்கிக் கொள்ளை சம்பவங்களுக்கான தொடர்பு எப்படி? வங்கிக் கொள்ளைக்கான காரணம் என்ன ?என்பதையும், கல்வி எப்படியானவர்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் பல அதிரடி திருப்பங்களோடு விரிவாகப் பேசுகிறது படத்தின் திரைக்கதை.
முதன்மை நாயகனாக லிங்கேஷ் நடித்துள்ளார். நல்ல முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளார்.
நாயகியின் பாத்திரம் சிறியது என்றாலும் குறைவின்றி செய்திருக்கிறார். லிங்கேஷின் கிராம நண்பர்களாக வரும் நால்வரும் நல்ல தேர்வு.
இளமையாக ஆரம்பிக்கும் முன்பாதியில் ஒளிப்பதிவாளர் வண்ணங்களை அழகாக இணைத்து விஷுவலாக படத்திற்குப் பலம் சேர்த்துள்ளார்.
எளியவர்களுக்கு கல்வி எட்டாக்கனி ஆகிவிடக்கூடாது என்ற கருத்தை தன் முதல் படத்திலே அக்கறையோடு பதிவு செய்தமைக்காக இயக்குநர் ஜெய் அமர் சிங்கைப் பாராட்டலாம்.