கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் கச்சிராயநத்தம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்த போது அவரது சிறந்த நிர்வாகத்திற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டிலிடம் விருது பெற்றவர் விருதகிரி.அவர் புதுமுகம் கதாநாயகனாக நடிக்கும் படம் நடிக்கும் ‘விருத்தாசலம் ‘. லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.செந்தில்முருகன் தயாரிக்கிறார்.
கதாநாயகிகளாக ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சம்பத்ராம், பாவாலட்சுமணன், காதல்சரவணன், வெண்ணிலா கபடிக்குழு ஜானகி, மதுபானக்கடை ரவி, நெல்லை சிவா, ஆர்.என்.ஆர்.மனோகர், சுதா, இளங்கோ, அபிஷேக், நிருபமா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – உமாசங்கர் – சிவநேசன்,இசை – ஸ்ரீராம் , பாடல்கள் – இளையகம்பன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரத்தன்கணபதி.
படம் பற்றி இயக்குநர் ரத்தன்கணபதியிடம் கேட்டோம்…
“ஒரு நாயகன் மூன்று கதாநாயகிகளை கொண்ட நான்கு முனை காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது திரைக்கதை.
நாயகனின் மனதில் மறைந்து கிடக்கும் காதல் என்ன? யார் மீது..? எப்படி, ஏன் என்பதுதான் கதை. சிறுவன் விருத்தகிரி வாழ்வில் எதிர் பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அதனால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தூக்கி வீசப்படுகிறான். அவன் குற்றவாளியாக காரணம் என்ன? அங்கு அவன் யாரை சந்திக்கிறான். சீர்திருத்த பள்ளியில் சிறுவன் திருந்தினானா…அவன் வாழ்வில் என்ன நடந்தது என்பது போன்ற திரைக்கதை அமைத்துள்ளோம்.
தேவர்மகன், நாட்டாமை, என் ராசாவின் மனசிலே, பருத்திவீரன் போன்ற படங்களை போல முழுக்க முழுக்க கிராமத்து கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம்.சிறந்த கிராமத்து காதல், மோதல் கதை இது.மக்களுக்கு நிச்சயம் பிடித்த படமாகவும் வெற்றிப் படமாகவும் இந்த விருத்தாசலம் இருக்கும் ”என்றார் இயக்குநர் ரத்தன்கணபதி.
படத்தின் முழு படப்பிடிப்பும் விருதாசலத்திலேயே நடந்துள்ளது.