இளையராஜாவின் ஆயிரமாவது படமாக உருவாகிறது பாலாவின் தாரை தப்பட்டை. பாலாவின் வித்தியாசமான படைப்பில் உருவாகி வருகிறது தாரை தப்பட்டை. படத்தில் நாயகனாக நடிக்கிறார் சசி குமார். நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.
நலிந்து வரும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் பாலா. இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இசைஞானிக்கு இது சினிமாவின் வாழ்க்கையில் 1000-வது படம்.
இசையினை வரும் டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி வெளியிட இருக்கின்றனர். படத்தினை வரும் பொங்கல் தினத்தன்று வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.