ஜெபிஆர் பிலிம்ஸ் ரஜினி ஜெயராமன் தயாரிப்பில் அனுரசண் இயக்கியுள்ள படம். கதிர், ரேஷ்மிமேனன். சார்லி, தென்னவன் நடித்துள்ளனர்..
சார்லி ஒரு போலீஸ் இன்பார்மர். அவ்வப்போது போலீசுக்குத் தகவல் சொல்பவர். அதை வைத்து போலீஸ்காரர்கள் குற்ற செயல்களைக் கண்டு பிடிப்பர். அல்லது பேரம் பேசி ஆதாயம் பார்ப்பர். இப்படித்தான் போலீஸ் இருக்கிறது. சார்லி மூலம் கதிரும் போலீசின் நண்பராகிவிடுகிறார். தானுண்டு தன் வேலையுண்டு இருக்கும் கதிரை மெல்ல. தங்கள் நண்பர்போலாக்கி காரியம் சாதிக்கிறார்கள்.
ஒரு பாரில் சூதாட்டம் நாடபெறுவதாக கதிர் தகவல் சொல்கிறார். போலீஸ் ரெய்டு போய் பிடிக்கிறது. அங்கிருந்த 2 1/2லட்சம் பணத்தையும் போலீஸ் கொள்ளையடிக்கிறது. அது வேறு ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்லை எனத் தெரிந்தே செய்கிறார் இந்த இன்ஸ்பெக்டர் .இதனால் இரு இன்ஸ்பெக்டர்களுக்குள் பகை புகைகிறது. இந்நிலையில் கதிரைக் கொல்ல சூதாட்ட பார் நடத்தும் கும்பல் துரத்த அப்போது பைக் ஓட்டிவந்த சார்லி கொல்லப் படுகிறார். இதைக் கண்முன் பார்த்த கதிர் மரண பயத்தில் இருக்கிறார். அவரையும் துரத்துகிறார்கள் குத்திவிட்டு ஓட அவர் இன்ஸ்பெக்டரிடம் தஞ்சமடைய அவர் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். குற்றவாளிகளுக்கும் போலீசுக்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம் என்று பிறகுதான் புரிகிறது. முடிவு என்ன என்பதே ‘கிருமி’ படம்.
நடுத்தர வர்க்க நாயகனாக கதிரும் அவர் மனைவியாக வரும் ரேஷ்மி மேனனும் நல்ல தேர்வு. சார்லிக்கு சத்தான பாத்திரம். மரணபயத்தைக் கண்ணில் காட்டி இறப்பது. அடடே..!யோகிபாபு வனிதா, தென்னவன் மட்டுமல்ல துரோகி போலீசாக வரும் டேவிட், மாரிமுத்து கூட நினைவில் நிற்கிறார்கள்.காக்கா முட்டை மணிகண்டனின் கதையில் இதிலும் சமூக சிந்தனையும் இந்த அமைப்பின் மீதான கோபமும் வெளிப்பட்டுள்ளது.
பரபரப்பாகச் செல்கிறது திரைக்கதை. ஒளிப்பதிவு அபாரம். இசைக்கும் குறைவில்லை. கடைசியில் கண்டு கொள்ளாமல் போ எதையும் தவிர்த்துவிட்டுப் போவதே ஜெயிப்பதைபோல் தான் என்று படத்தை முடித்துள்ளதுதான் நெருடுகிறது.