கீர்த்தி சுரேஷின் நடிப்பில், ZEE5 இல் ‘ரகுதாத்தா’ , 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !

ZEE5 இல் வெளியான வேகத்தில், “ரகுதாத்தா” திரைப்படம், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான ‘ரகு தாத்தா’ திரைப்படம், வெளியான வேகத்தில், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து , சாதனை படைத்துள்ளது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சுமன் குமார் இயக்கத்தில், தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், வெளியான ‘ரகுதாத்தா’ திரைப்படம், இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றி அழுத்தமாகப் பேசுகிறது. சமூகப் பிரச்சினைகளின் வேரை ஆராயும் கதைக்களத்தில், மெலிதான நகைச்சுவையுடனும் அழுத்தமான திரைக்கதையுடனும், ஒரு புரட்சிகரமான பெண்ணின் பயணத்தைச் சொல்கிறது ‘ரகுதாத்தா’.

பெண் விடுதலை, பெண் சுதந்திரம் பற்றிய பார்வைகளை அழுத்தமாக எடுத்துச்சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள “ரகுதாத்தா” திரைப்படம், வீட்டில் ஓடிடியில் குடும்பத்தோடு ரசித்துக் கொண்டாட மிகச்சரியான திரைப்படமாக அமைந்துள்ளது. முன்னதாக ZEE5 தளத்தில் வெளியான ‘அயலி’ மற்றும் தி ‘கிரேட் இண்டியன் கிச்சன்’ படங்களைப் போல “ரகுதாத்தா” திரைப்படமும், பார்வையாளர்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செப்டம்பர் 13 ஆம் தேதி ZEE5 இல் வெளியான ‘ரகுதாத்தா’ திரைப்படம் வெளியான 24 மணி நேரத்திற்குள், ரசிகர்களின் பேராதரவில், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

ZEE5 இல் “ரகுதாத்தா” தமிழிலும், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கிறது.

ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்குப் பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்திலிருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்க்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.