ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், இயக்குநர் இமயம் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’.
இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டியும், அனிமேஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், டீசரை ஆர்யாவும் வெளியிட்டார்கள்.
சமீபத்தில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் பாடல்களை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இன்று இயக்குநர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குரங்கு பொம்மை’ படத்தின் டிரைலரை வெளியிட்டார். படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், அனிமேஷன் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்களைப் போலவே, டிரைலரும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
Kurangu Bommai Trailer Link :