டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிலம்பரசன்,நயன்தாரா, ஆன்ட்ரியா,சூரி நடித்திருக்கும் “இது நம்ம ஆளு”படத்தின் பாடல் ஒலி நாடா உரிமை ரூபாய் ஒரு கோடி ஐம்பது லட்சம் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது,
இப்படத்திற்கு டி,ராஜேந்தரின் இளைய மகனும் சிலம்பரசனின் சகோதரருமான குறளரசன் இசையமைத்துள்ளார்.முதல் படத்திலேயே இவ்வளவு அதிக விலைக்கு பாடல் ஒலி நாடா விற்பது இதுவே முதல் முறை.
இந்த ஒலிநாடா உரிமையை”லகரி”இசை நிறுவனம் வாங்கியுள்ளனர்.
“”லகரி” நிறுவனம் ஏ,ஆர்,ரஹ்மானின் முதல் படமான “ரோஜா”படத்தின்
ஒலி நாடா உரிமையை வாங்கினர் .இன்று ஏ.ஆர்.ரஹ்மான் புகழின் உச்சியில் உள்ளார்.
தற்போது குறளரசனின் முதல் படமான “இது நம்ம ஆளு ” படத்தின் ஒலிநாடா உரிமையை (தமிழ்,தெலுங்கு) வாங்கியுள்ளனர். தமிழ் தெலுங்கு இரண்டும் சேர்த்து ரூபாய் ஒரு கோடி ஐம்பது லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது
“ஐயம் ய லிட்டில் ஸ்டார் ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்” என்று முதல் முறை யாக பாடி நடித்த “டி,ராஜேந்தரின் “சம்சார சங்கீதம்”சூப்பர் ஸ்டாரின் “தளபதி ” சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி கண்ட ராஜமவுலியின் “பாகுபலி” , தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மாதவன் நடித்த “இறுதி சுற்று “போன்ற நூற்றுக்கணக்கான வெற்றிப்படங்களின் ஒலிநாடா உரிமையை வாங்கி”லகரி”நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.
“இது நம்ம ஆளு “படத்தின் பாடல்கள் சிலம்பரசனின் பிறந்த தினமான பிப்ரவரி 3ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் கேட்கலாம்.