சினிமா பற்றிய தேடல் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு தேடுபவர்களுக்கும் உதவும் வகையில் தகவல்கள் முகவரிகள் அடங்கிய ‘பிங்கர்டிப்ஸ் சினிமாகாம்’
fingertipscinema.com இணையதளத் தொடக்கவிழா நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.பொறியியல் பட்டதாரி பிரகாஷ் என்பவர்இந்தத் தளத்தை வடிவமைத்துள்ளார்.
மூத்த நடிகர் எஸ்.வி.சேகர் இணையதளத்தை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகர் பேசும்போது “இன்று காலமாற்றத்தில் எவ்வளவோ தொழில்நுட்ப மாற்றங்கள் வந்து விட்டன. ஒரு காலத்தில் எடுத்த படத்தைப் பிலிமாகவாவது பார்க்க முடியும் இப்போது முடியாது .டிஜிட்டலாகிவிட்டது.
இன்றைய இளைஞர்களிடம் ஆர்வம் இருக்கிறது. ஆனால் போதுமான ஆற்றல் இல்லை. வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் நம்புகிற நிலையுள்ளது. ஒரு வெற்றிப் படம் கொடுத்தவர்களே அடுத்த படத்துக்கு தடுமாறி நிற்கிறார்கள். வெறும் தொழில்நுட்பம் மட்டும் போதாது. கதை வேண்டும். வெறும் குறும்பட அனுபவம் மட்டுமே போதாது. யாரிடமாவது உதவியாளராக இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். சினிமாவைத் தினம் தோறும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். சினிமாவில் எல்லாம் தனக்குத் தெரியும் என்று நினைத்தால் அவன் மேலே வளரமுடியாது.எல்லாம் தனக்குத் தெரியும் என்று நினைத்தால் அப்போதே வீழ்ச்சி ஆரம்பமாகும்.தயாரிப்பாளரையும்
நல்ல கதையையும்காப்பாற்றுங்கள். வெற்றி நிச்சயம்.இன்று சினிமாவுக்கு பல கதவுகள் மூடப்பட்டு வருகின்றன. இருந்தாலும் வேறு கதவு திறக்கும். சினிமாவில் உழைக்கவேண்டும் காத்திருக்க வேண்டும். உடனே எதுவும் வந்து விடாது. நான் 95 படங்களில் நடித்திருக்கிறேன்.
நான் 195 படங்களை மறுத்திருக்கிறேன்.அவற்றில் 194 படங்கள் வெளிவரவே இல்லை. இதுதான் சினிமா.நான் 95 படங்களில் நடித்தாலும் நாடகக்காரன் என்பதில் பெருமைப் படுகிறேன். 24 நாடகங்களை உலகம் முழுக்க 6200 முறை மேடை யேற்றியுள்ளேன். 34 ஆண்டுகளுக்கு பிறகும் நானும் விசுவும் சேர்ந்து ‘மணல்கயிறு- 2’ படம் எடுத்து இருக்கிறோம். ‘மணல்கயிறு-1ல் வந்த அதே நடிகர்களை வைத்து படம் எடுத்து இருக்கிறோம். இதுஒரு சாதனை நவம்பரில் வெளிவரும் .இந்த fingertipscinema.com இணைய தளம் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்றார்.
இத்தளத்தை வாழ்த்தி விஜய் சேதுபதி, ராம்தாஸ் சிவகார்த்திகேயன், ‘நட்டி’ நட்ராஜ், பரத், ஆகிய நடிகர்களும் சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி போன்ற நடிகைளும் வாழ்த்தி வீடியோவில் பேசியிருந்தார்கள். அந்த காட்சிகள் முன்னதாக விழாவில் திரையிடப் பட்டன.
நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ‘ராட்டினம்’ கே:எஸ்.தங்கசாமி, ‘றெக்க’ ரத்தினசிவா.
நடிகர்கள் சௌந்தரராஜா, காளிவெங்கட், மகேந்திரன், கதிர் ,தயாரிப்பாளர் ஏ.ஆர்.கே. ராஜராஜா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியை சன்டிவி அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.