முக்குழி பிலிம்ஸ் தயாரிக்கும் குழலி திரைப்படத்தை இயக்குநர் செரா .கலையரசன் இயக்குகிறார் . காக்காமுட்டை திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக நடிகை ஆரா இணைந்து நடிக்கிறார் . பிரபல இசையமைப்பாளர் DM உதயகுமார் இசையமைக்க, ஷாமிர் ஒளிப்பதிவினையும் தியாகு படத்தொகுப்பினை மேற்கொள்கிறார்கள் . இப்படத்திற்கான பாடல் வரிகளை கார்த்திக் நேதா எழுதியுள்ளார் . ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை விரைவில் வெளியிட இருக்கிறது .
இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது . இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர் . மேலும் சிறப்பு விருந்தினர்களாக நடிகை ஊர்வசி , இயக்குநர்கள் RV உதயகுமார் , பேரரசு ,ஜாக்குவார் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .
ஊர்வசி பேசியவை :
பல வருடங்களாக எனது அண்ணன் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் நடக்கவில்லை. தற்போது அண்ணன் ஒரு படம் எடுத்திருக்கிறார் .அதை நினைத்து நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனந்த கண்ணீருடன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
RV உதயகுமார் பேசியவை :
இத்தனை வருடத்தில் நான் இயக்க முடியாமல் போன நடிகை ஊர்வசி மட்டும்தான் .இப்படி போன்றவர்கள் இங்கு வருகை தந்து இப்படத்தை வாழ்த்துகிறார்கள் ,கண்டிப்பாக வெற்றி அடையும். படம் பிரமாதமாக வந்துள்ளது. இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள். படக்குழுவினர் அனைவருக்கும் இயக்குனர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.
பேரரசு பேசியவை :
கொரோனா காலத்திற்குப் பிறகு தற்போதுதான் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஜாதியை ஒழிப்பதற்காக படம் வர வேண்டுமே தவிர அதை வளர்ப்பதற்கு கிடையாது. சமீப காலங்களில் வரும் சாதி பசங்களுக்கு சவுக்கடி கொடுக்கும் படமாக குழலி அமைய வேண்டும். இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜாக்குவார் தங்கம் பேசியவை :
காதலால் ஜாதி ஒழியும் என்பதைவிட கல்வியால் ஜாதி ஒழியும் என்பதை ஏற்க முடிகிறது .இந்த படத்தின் இயக்குனருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் படக்குழுவினர்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் .படத்தின் பாடல்கள் அருமையாக இருக்கிறது .இசை அமைப்பாளர் உதயகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
படத்தின் இயக்குனர் செரா .கலையரசன் பேசியவை :
சமூக அக்கரை உள்ள படங்களை மட்டுமே இயக்க வந்துள்ளேன் .பெண்களை தவறாக சித்தரிக்கும் படங்களை நான் எடுக்க வரவில்லை .அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை.
. படத்தின் பாடல்கள் மிகவும் பிரமாதமாக உள்ளது இசை அமைப்பாளர் உதயகுமார் அவர்களுக்கு என் நன்றி .கிராமிய இசைக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி. தயாரிப்பாளரை தகப்பன் என்று தான் சொல்ல வேண்டும் .அவ்வளவு உதவிகளையும் சுதந்திரத்தையும் எனக்கு அளித்தார். இந்தப் படத்தை வெளியிடும் நண்பர் டிரைடன்ட்ஸ் ரவீந்திரன் அவர்களுக்கு நன்றி.
நடிகர் விக்னேஷ் பேசியவை :
சில வருடங்களுக்கு முன்பு காக்க முட்டை படத்திற்காக மேடை ஏறினேன். அதற்குப்பிறகு இப்படத்தில்தான் மேடை ஏறுகிறேன். இந்தப் படம் வெளியான பிறகு காக்காமுட்டை விக்கி என அழைப்பதற்கு பதிலாக குழலி விக்கி என்று தான் அழைப்பார்கள் என நினைக்கிறேன். இயக்குனர் கலையரசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக வந்துள்ளது.
இசையமைப்பாளர் DM உதயகுமார் பேசியவை :
இந்த பாடல் உருவாக காரணமாக இருந்த அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் ,கிராமிய இசைக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் .