பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அஞ்சுக்கு ஒண்ணு.இத்திரைபடத்தை ஆர்வியார் இயக்கியுள்ளார். கட்டட வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாக கூறியுள்ள படம். மேலும் கட்டட வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் எப்படியெல்லாம் வாழலாம், எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதை இத்திரைப்படத்தில் மிகவும் எதார்த்தமாக இயக்குநர் ஆர்வியார் கூறியுள்ளார்.
கட்டட வேலை செய்யும் ஐந்து இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு பெண் வருகிறாள். அதன் பின் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.இத்திரைப்படம் இம்மாதம் திரைக்கு வரவிருக்கிறது…
பேனர் – பேரண்ட்ஸ் பிக்சர்ஸ்
தயாரிப்பு – எவர்கிரீன் எஸ். சண்முகம்
இணை தயாரிப்பு – எஸ்.எஸ். ராஜ்
இயக்கம் – ஆர்வியார்
இசை – சாகித்யா.ஆர்
ஒளிப்பதிவு – நந்து
நடிகர்,நடிகைகள்:
ஜெரால்டு, ராஜசேகர்,அமர்,நசீர்,சித்தார்த்,உமாஸ்ரீ ,மேக்னா இவர்களுடன் சிங்கம் புலி ,முத்துக்காளை ,உமா ,கசாலி,ஷர்மிளா ,காளையப்பன், சிவநாராயண மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Deprecated: json_decode(): Passing null to parameter #1 ($json) of type string is deprecated in /home1/tnsfclub/public_html/tamilcinemareporter/wp-content/plugins/itro-popup/functions/core-function.php on line 146