
உலக இயற்கை நிதியம் என்ற நிறுவனம் முதல் முதலாக உலக எர்த்ஹவர் தினத்தை 2007-ல் ஆஸ்திரேலியாவிலும், 2009-ல் இந்தியாவிலும் துவங்கினர். வருடந்தோறும் மார்ச் மாதம் மூன்றாவது சனிக்கிழமை இரவு 8.30-மணி முதல் 9.30-மணி வரை மின்சாரத்தை துண்டித்து உலக எர்த்ஹவர் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்த உலக எர்த்ஹவர் தினமான சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழக வளாகத்தில் உலக இயற்கை நிதியம் சார்பில் (WWF) மாணவ, மாணவிகள் அன்று இரவு 8-30 மணி முதல் 9-30-மணி வரை 60-நிமிடம் மின்சாரத்தை துண்டித்து 60+ என்ற வடிவில் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தங்களது கையில் மெழுகுவர்த்தி ஏந்தி உலக எர்த்ஹவர் தினத்தை கொண்டாடினர்.
இதில் சிறப்பு விருந்தினராக தேசிய காற்று சக்தி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரியும் கனகவேல், உலக இயற்கை நிதியத்தின் தமிழக தலைவர் சனத் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவர்களிடையே உரையாற்றிய சிறப்பு விருந்தினர்கள்:
மின்சாரத்தை தயாரிப்பதினால் பூமி வெப்பமடையமாகிறது, பருவநிலை மாற்றம் நடக்கிறது அதை தடுப்பதற்காக எந்த வகையில் மின்சாரத்தை சேமிக்கலாம் குறிப்பாக தேவையற்ற இடங்களில் மற்றும் நேரத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும், மின்சார உபகரணங்களை அதிக அளவில் பயண்படுத்தாமல் இருப்பது போன்ற உறுதிமொழி எடுத்து மின்சாரத்தை சேமித்து இயற்கை வளங்களையும், பூமியையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இதுனுடைய நோக்கம் என்று விஞ்ஞானி கனகவேல் தெரிவித்தார்.

மேலும் குளோபல் வாமிங் அதிகரிக்கும், புவி வெப்பமயமாகும், இதை தடுக்கும் முயற்சியில் நிலக்கரியை எரித்து மின்சாரத்தை தயாரிப்பதை விட சோலார் எனர்ஜி மூலம் மின்சாரத்தை பயன்படுத்தினால் புவி வெப்பமயமாதலையும், குளோபல் வாமிங் அதிகமாவதையும் தடுக்கலாம் என்று மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உலக இயற்கை நிதியத்தின் தமிழ்நாடு முதன்மை கல்வி அலுவலர் சரவணன், சத்தியபாமா பல்கலைக்கழக இயக்குநர் மரியசீனா ஜான்சன், ஜோதிர் ராகமயா பவுண்டேஷன் நிறுவன தலைவர் மரிய டிப்பியனி பிரேர். ஜேர்மனியை சேர்ந்த சமூக ஆர்வலர் பேட்ரிக், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.