
மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் “நாடோடிகள் 2” திரைப்படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் – ஜாக்கி, படத்தொகுப்பு – A.L.ரமேஷ்.
தமிழர் திருநாளன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழுவினர், நாடோடிகள் படத்தை போன்றே நாடோடிகள் 2 படமும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்படி சிறந்த விருந்தாக அமையும் என்று கூறியுள்ளனர்.