
திறமையான நடிகை, தமிழ் பேசத் தெரிந்த சென்னையிலே வாழும் லட்சுமி பிரியா இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
” லட்சுமி ப்ரியா இந்தப் படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக வரும் சரத் சாருடன் இணைந்து பணியாற்றும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார்.அவருடைய புத்தி சாலித்தனமும், அணுகுமுறையும் ஒரு சவாலான வழக்கை வெற்றிகரமாக தீர்க்க உதவுகிறது. அவரது கதாபாத்திரம் மிக சவாலானது, லட்சுமி ப்ரியாவின் திறமையும், உருவ அமைப்பும் நிச்சயம் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் என நம்புகிறேன் ” என தெரிவித்தார் இயக்குநர் பிருதிவி.