ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த மக்களின் வாழ்வியலை சொல்ல ஒரு தைரியம் வேண்டும் அதை உருவாக்க சர்வ வல்லமை படைத்த ஒரு ஆர்ட் டைரக்டர் வேண்டும் அவர்தான் மார்ட்டின் டைட்டஸ்.
மலையகத்தில் வாழும் மக்கள் அவர்கள் சார்ந்த வாழ்க்கை முறை, அவர்கள் உபயோகப்படுத்த பயன்படுத்திய பொருட்கள், வேட்டையாட பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியவற்றை காட்டினுள் கிடைக்கும் பொருட்களை கொண்டு உருவாக்கி ஆர்ட் இயக்குநர்களில் புது சாதனையை படைத்திருக்கிறார் மார்ட்டின்.
சங்ககிரி ராஜ்குமார் இயக்கும் நெடும்பா படத்திற்காக மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மூங்கில் கழி வீடுகளை ஆணிகள், பசைகள் இன்றி உருவாக்கி சாதனை படைத்துள்ளார் மார்ட்டின். இதற்கு முன் எந்த ஆர்ட் டைரக்டரும் காட்டினுள் கிடைக்கும் பொருட்களை கொண்டு மலையக கிராமத்தை உருவாக்கவில்லை என்பது வரலாறு. பானைகள் செய்ய உள்ளூர் மக்களையும், ஆயுதங்கள் செய்ய பாறை கற்களை கொண்டு உருவாக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கையாளாத யுக்தி.
சுப்ரமணியபுரம், ஈரம், பாபநாசம் படங்களின் ஆர்ட் டைரக்டராக பணியாற்றிய ரெம்போன் பால்ராஜ் உதவியாளர் மார்ட்டின் டைட்டஸ். நாகர்கோவில் மண்ணின் மைந்தரான இவர் விஷூவல் கம்யூனிகேசன் சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் முடித்துள்ளார்.
தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் படங்கள் அகத்தியனின் “மழைச்சத்தம்”, A.R.முருகதாஸ் உதவியாளர் ஹர்ஷவர்தன் இயக்கும் “சைனா”, சிநேகன் நடிக்கும் “பொம்மிவீரன்” ஆகிய படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார்.