அசோக் செல்வன் ,பிந்து மாதவி, ஜெகன், கருணாஸ், நாசர், எம். எஸ் பாஸ்கர், ஊர்வசி,ராட்டினம் சுவாதி நடித்துள்ளனர். சத்யசிவா இயக்கிள்ளார்.அருண்பாண்டியன் தயாரித்துள்ளார்.
தன் தங்கையைக் காணவரும் தோழிகளை வட்டமிடுவது அவர்களிடம் காதல் சொல்வது அசோக் செல்வனிண் பொழுதுபோக்கு.
அப்படி வரும் ஒருவரான பிந்து மாதவியை பிடித்துப் போகிறது. ஆசைப்படுகிறார்.இருவரும் காதலிக்கிறார்கள்.வீட்டில் எதிர்ப்பு.
ஒரு வேலை தேடிப்போய் கருணாஸ் நடத்தும் சேனலான டாப்டிவியில் வேலைக்குச் சேர்கிறார்.
சேனலோ இழப்பில் செத்துக் கொண்டிருக்கிறது. அசோக் செல்வன் , ஜெகன் இருவரும் யோசித்து சேனலைத் தூக்கிநிறுத்த ஒரு நிகழ்ச்சி தொடங்குகிறார்கள். அதன்படி குடும்பத்தில் திருமணத்துக்குச் சம்மதிக்காத காதலர்களை அழைத்து இணைத்து வைப்பதுதான் நோக்கம்.நடிப்பதையே தொழிலாகக் கொண்டஓர் ஊரில் உள்ள எல்லாரையும் தேர்வு செய்து சேனல் மூலம் அவர்களையே போலியாக காதலர்களாக உருவாக்கி சேர்த்து வைக்கிறார்கள். சேனல் ஹிட்டாகிறது. பிறகு அசோக் செல்வன் ,பிந்து மாதவி, ஜோடி இணைந்ததா என்பதே கதை.
ஆரம்பத்தில் அசோக் செல்வன் ,பிந்து மாதவி ஆகியோரைக் காதலர்களாகக் காட்டி ஒரு காதல் கதையாகத் தொடங்குகிறது படம் .பிறகு சேனல் செட்டப் காதலர்கள் என்று காமெடி டிராக்கில் பயணிக்கிறது .சாரிகொஞ்சம் ஓவர் ரகம்தான் என்றாலும்
அதுவும் ரசித்துச் சிரிக்க வைக்கிறது.ஊர்வசி நிகழ்ச்சி நடத்துபவராக வந்தபின் கலகலப்புகூடுகிறது. டிவி சேனல் சார்ந்த காட்சிகள் சிரிக்க வைக்கும் நோக்கத்துடன் மட்டுமே வைக்கப் பட்டுள்ளதால் ஆங்காங்கே நெளிய வைத்தாலும் சமாளித்து சிரிக்கிறோம். நோ லாஜிக் ஒன்லி காமெடி மேஜிக் என்கிற வகையில் ஒரு காமெடி கலாட்டாதான் படம். .