சாய் இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டின் 5-வது பட்டமளிப்பு விழா 26/05/15 மாலை 3 மணி அளவில் சென்னை ஹோட்டல் அம்பிகா எம்பயரில் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் திருமதி.இந்திரா வினோத்குமார் குத்துவிளக்கு ஏற்ற ,கடவுள் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது.
முதலாவதாக கல்லூரி இயக்குநர் திரு.டாக்டர்.வினோத்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றி, சிறப்பு விருந்தினர்களையும் கல்லூரியைப் பற்றியும் மிகச்சிறப்பாக உரையாற்றினார்.
திரு.செப்.மால்குடி கவிதா, கியாஸ் கிச்சன் அவர்கள் கல்லூரி விழாவின் பெயர் பேனரை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அடுத்து திரு.செப்.பழனிமுருகன் சன் டிவி கிச்சன் கலாட்டா திரு.செப்.கண்ணன் – தாஜ் சென்னை வானவூர்தி கிச்சன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற பாரத்சேவாக் சமாஜின் ஓர் ஆண்டு தொழில்பயிற்சி நிறைவுபெற்ற 110 மாணவர்களுக்கு பட்டய சான்றிதழை கல்லூரியின் முதல்வர் டாக்டர்.வினோத்குமார் வழங்கி, மிகச்சிறந்த மாணவர்களுக்கு வெளிநாட்டில் அதாவது ஈராக் பாஸ்ராவில் பணிபுரிய பணிநியமன சான்றிதழை வழங்கினார். மனமகிழ்ச்சி அடைந்த மாணவர்களும், பெற்றோர்களும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு மகிழ்ச்சிப் பெருக்கில் பங்கு கொண்டார்கள்.
முக்கிய நிகழ்வுகள் – இந்தியாவின் பணிநியமனம் பெற்றவர்கள் -76
ஹோட்டல்கள் – தாஜ், லீ மெரிடீயன், ஹில்டன், ஹயாத் ஐ.டி.சி., லீலாபேலஸ், ஹோட்டல் அவாப்ட்,அக்கார்ட், சவேரா.
அயல்நாட்டில் அதாவது மலேசியாவில் தொழிற்கல்வி பயிற்சிக்காக 2 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.
மேலும் சிறப்பு அம்சமாக
ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் பயன்பெறும் வகையில் HOTELIER GUIDE.COM என்ற online Magazine வெளியிடப்பட்டது.