ஜீவா நடித்த ரெளத்திரம் இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி தயாரிப்பில் “பீக்காக் பிலிம் பேக்டரி” வழங்கும் சாருஹாசன் நடிக்கும் புதிய படம்.
பிரகாஷ் நிக்கி கோயமுத்தூர் மண்ணின் மைந்தர். கொச்சியில் இசை சம்பந்தமான படிப்புகளை முடித்து, இசையமைப்பாளர் A.R.ரஹ்மானிடம் கீ ஃபோர்டு பிளேயராக பணியாற்றியவர்.
ஜீவா, ஸ்ரேயா நடித்த ரெளத்திரம் இவர் இசையமைத்த முதல் திரைப்படம். அப்போதைய ட்ரெண்டில் அனைத்து பாடல்களும் வானொலியில் மெகா ஹிட்டடித்த பாடல்கள். அதற்கு பிறகு இவர் களம் என்ற படத்திற்கு இசையமைத்தார் இதன் பின்னணி இசைகோர்ப்பு சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டது. நல்ல கதைகளுக்காக காத்திருந்தவருக்கு கிடைத்ததுதான் சாருஹாசன் நடிக்கும் புதிய படம்.
”ரெளத்திரம், களம் படங்களுக்குப்பிறகு நிறைய படங்கள் இசையமைக்க சான்ஸ் வந்தது ஆனால் ஏனோ நல்ல கதை தேடலில் இருந்த போதுதான் விஜய் ஸ்ரீஜி சொன்ன கதை வேறொரு ட்ரெண்டில் இருந்தது. அடுத்த செகண்ட் நானே இந்த படத்தை தயாரிக்கிறேன்னு ஏற்றுக்கொண்டேன். வேறெரு தளத்தில் இயங்கும் இந்த கதை ட்ரெண்டிங் சினிமாவையும் தாண்டி வேறொரு கோணத்தில் இருந்தது. அதுவே நான் தயாரிக்க முன்வரக்காரணம்.
86 வயது சாருஹாசன் பவுடர் உலகின் டானாக நடிக்கிறார். பொதுவாக நம்ம ஊரில் மட்டும் பவுடர் என்றால் முகத்துக்கு போடும் பவுடர் என நினைப்போம், இந்தியாவின் மற்ற நகரங்களில் பவுடர் என்றால் ட்ரக்கிங் என நினைப்பார்கள். மொத்தம் 12 கேரக்டர்களை உள்ளடக்கி கதையமைக்கப்பட்டுள்ள இந்த படம் நோ மேக்கப், நோ ட்ரக் என்ற இரண்டு விசயத்தை கையிலெடுத்திருக்கிறது.
விஜய்ஸ்ரீஜி இயக்கும் இந்த திரைப்படம் நிகழ்காலத்தில் நடக்கும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை சாட்சியாக சொல்கிறது. ஒருவனுக்கு ஏதாவது ஒன்னு முடிவு பண்ணிட்டால் அது கர்ப்பத்தில் இருந்தாலும் எடுப்பான், வேணாம்னு முடிவு பண்ணிட்டா அது பக்கத்தில் இருந்தாலும் எடுக்க மாட்டான், இது மனித இயல்பு அல்லது மன நோய் எனவும் சொல்லலாம். இதன் பிரதிபலிப்பு தான் இந்த புதிய படம். ”
சூதுகவ்வும் படத்தின் உதவி ஒளிப்பதிவாளர் ராஜா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். லெனின் உதவியாளர் சுதா எடிட்டிங்.
பிரகாஷ் நிக்கி இயக்குநர் சாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.