நேர்மையான போலீஸ் அதிகாரி சத்யராஜ். சமூக விரோதிகள் தாக்குதலில் ஒரு காலை இழந்தவர். தன் மகன் பெரிய போலீஸ் அதிகாரியாகி விருதுகள் வாங்கவேண்டும். என்பது அவர் கனவு. ஆனால் மகன் விக்ரம்பிரபுவோ போலீஸ் வேலையை வெறுக்கிறார். பேங்க் வேலைக்கே போக விரும்புகிறார். அவரது காதலி க்கு தன் அப்பாவைப் போல கணவரும் போலீஸ்ஆக இருப்பதில் விருப்பமில்லை. விருப்பமில்லாத விக்ரம் பிரபு போலீஸ் அகாடமி பயிற்சிக்கு தேர்வாகிறார்.
காதலிக்காக போலீஸ் வேலையை துறந்தாரா கடமை வீரராக சிறந்தாரா என்பதே கதை.
விக்ரம் பிரபுவுக்கு காக்கி சட்டை நன்றாகவே இருக்கிறது. சத்யராஜின் மிடுக்கும் உயரமும் போலீஸ் பதவிக்கு அழகு சேர்க்கிறது. காலிழந்த பிறகும் அவர் போடும் சண்டை நம்பவும் ரசிக்கவும் வைக்கிறது.நாயகி மோனல் அளவான அழகு ,நடிப்பு.
ஏடி எம்களில் போலி கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளை விரிவாகக் காட்டியுள்ளார்கள். இவ்வளவு சுலபமாக செய்யும்படி பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றன என்பதை நம்ப முடியவில்லை.
நாயகன் ஒரு போலீஸ் ஆவது என்கிற முடிவு எடுப்பதற்குள் முக்கால் பங்கு படம் ஓடி விடுகிறது. அதுவரை காதலியுடன் சுற்றுவது சத்யராஜ் காட்சிகள், ஏடி எம் கொள்ளைகள் பற்றியெல்லாம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சத்யராஜுக்கு அமைந்த அழுத்தமான காட்சிகள் கூட விக்ரம் பிரபுவுக்கு அமையவில்லை. இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.
போலீஸ் அகாடமி பயிற்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் அழகு. ஒரு கட்டத்தில் இயக்குநரின் இலக்கு எது நாயகனின் காதலா ஏடிஎம் மோசடியா போலீஸ ஆவதா என்று குழம்பி தடம்புரண்டு நிற்கிறது கதை.ஓட்டைகள் இருந்தாலும் போரடிக்காமல் சொல்லி இருக்கிறார் இயக்குநர் கௌரவ்.